சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

69வது மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு 2024 டிசம்பர் 6 அன்று புதுதில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேர்னா ஸ்தலில் நினைவுகூரல் நிகழ்வு நடைபெறவுள்ளது

प्रविष्टि तिथि: 04 DEC 2024 5:42PM by PIB Chennai

பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 69-வது நினைவு தினத்தை அனுசரிக்கும் மகாபரிநிர்வாண் தினம், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பாக டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளையால் 2024, டிசம்பர் 6  அன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேர்னா ஸ்தலில் நடைபெறவுள்ளது .

குடியரசு துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர், பிரதமர் திரு நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோரின் மலர் அஞ்சலியுடன்  இந்த நினைவு நாள் காலையில் தொடங்கும்.

அதன்பிறகு, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவதற்காக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேர்னா ஸ்தலில் நடைபெறும் நிகழ்ச்சி முழுவதிலும் பொதுமக்கள் பங்கேற்பார்கள். புதுதில்லி, பண்டிட் பந்த் மார்கில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்திற்கு அருகிலுள்ள நுழைவாயில் எண் 1 வழியாக நாடாளுமன்ற வளாகத்திற்குள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்கள் வருவதற்கு  அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு நுழைவுச் சீட்டு அல்லது அழைப்பிதழ் தேவையில்லை.

----

SMB/KPG/DL


(रिलीज़ आईडी: 2080882) आगंतुक पटल : 84
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Marathi