மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பால் உற்பத்தியை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 04 DEC 2024 5:03PM by PIB Chennai

நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள சில நடவடிக்கைகள்:

பால் உற்பத்தி திறனை அதிகரிக்க ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தை மத்திய அரசு டிசம்பர் 2014 முதல் செயல்படுத்தி வருகிறது.

தேசிய கால்நடை இயக்கம்: தரமான தீவனம், பசுந்தீவனம் கிடைப்பதை மேம்படுத்துதல், கால்நடைகளுக்கு (கறவை மாடுகள் உட்பட) இடர்பாடுகளை ஏற்படுத்துதல் போன்றவற்றை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசிய பால்பண்ணை மேம்பாட்டுத் திட்டம்: கூட்டுறவு பால்பண்ணைத் துறையில் பால், பால் உபபொருட்களின் கொள்முதல், பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிற்கான வசதிகளை உருவாக்குதல், போன்றவற்றில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.

கோமாரி நோய், புருசெல்லோசிஸ் போன்ற கால்நடை நோய்களைக் கட்டுப்படுத்த உதவி வழங்கவும், கறவை மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளைத் தாக்கும் பிற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு உதவவும் கால்நடை சுகாதாரம், நோய் கட்டுப்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கிசான் கடன் அட்டை வசதி: கால்நடை பராமரிப்பு, மீன்வள விவசாயிகளின் நடைமுறை மூலதனத் தேவைகளுக்காக கிசான் கடன் அட்டை வசதியை அரசு விரிவுபடுத்தியுள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

-----

TS/PLM/AG/DL


(रिलीज़ आईडी: 2080880) आगंतुक पटल : 66
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri