மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
விசாகப்பட்டினம் ஐஐஎம் உடன் இணைந்து தேசிய மின்-ஆளுமைப் பிரிவின் 'செயற்கை நுண்ணறிவு எந்திரக் கற்றல் பயன்பாடுகள்' குறித்த திறன் மேம்பாட்டு நிகழ்வு
Posted On:
04 DEC 2024 5:25PM by PIB Chennai
டிஜிட்டல் இந்தியாவின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , தேசிய மின்-ஆளுமை பிரிவின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், டிஜிட்டல் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான தனது பணியைத் தொடர்கிறது.
விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின்-ஆளுமை பிரிவின் 'செயற்கை நுண்ணறிவு எந்திரக் கற்றல் பயன்பாடுகள்' குறித்த 2 நாள் பயிற்சிநிகழ்வு 2024, டிசம்பர் 2, 3 தேதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சகங்கள் மற்றும் ஆந்திரப் பிரதேசம், பீகார், தில்லி, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, நாகாலாந்து, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
மின் ஆளுமையில் செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் செயல்படுத்துவதற்கான நடைமுறை உத்திகளுடன் அதிகாரிகளை தயார்படுத்துவதை இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்த முயற்சி டிஜிட்டல் இந்தியா திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து மட்டங்களிலும் போதுமான திறன்களை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டுடன் ஒத்திருந்தது . தேவை அடிப்படையிலான பயிற்சியை வழங்குவதன் மூலம், செயல்திறன் மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட அதிநவீன மின்-ஆளுமை திட்டங்களை கருத்தாக்கம் செய்தல், வடிவமைத்தல் மற்றும் செயல்பாட்டுக்கு இந்த திட்டம் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.
----
SMB/KPG/DL
(Release ID: 2080865)
Visitor Counter : 18