உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுஷ்மான் மத்திய ஆயுத காவல் படை சுகாதாரத் திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 04 DEC 2024 4:47PM by PIB Chennai

ஆயுஷ்மான் மத்திய ஆயுத காவல் படை சுகாதாரத் திட்டம் 2021 ஜனவரி 23 அன்று தொடங்கப்பட்டது.

மத்திய ஆயுத காவல் படைகள், அசாம் ரைபிள்ஸ், தேசிய பாதுகாப்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் ஆயுஷ்மான் சிஏபிஎஃப் சுகாதாரத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் 41,21,443 ஆயுஷ்மான் மத்திய ஆயுத காவல் படை  அடையாள அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நவம்பர் 28, 2024 வரை, இந்தத் திட்டத்தின் கீழ் 14,77,064 இழப்பீடு கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்துள்ளார்.

***

TS/IR/KPG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2080848) வருகையாளர் எண்ணிக்கை : 72
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi