சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: ஸ்மைல் திட்டம்
தமிழ்நாட்டில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை உட்பட 6 நகரங்களில் செயல்படுத்தப்படுகிறது
Posted On:
04 DEC 2024 2:46PM by PIB Chennai
குழந்தைகள் உட்பட பிச்சை எடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு விரிவான மறுவாழ்வளிக்கும் ஸ்மைல் துணைத் திட்டம், மதம், வரலாறு மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த 81 நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 7660 நபர்கள் கண்டறியப்பட்டு, அவர்களில் 352 குழந்தைகள் உட்பட 970 நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த 352 குழந்தைகளில், 169 குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களுடன் மீண்டும் சேர்க்கப்பட்டனர். 79 குழந்தைகள் அங்கன்வாடிகளுக்கு அனுப்பப்பட்டனர். 33 குழந்தைகள் நலக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். 71 குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி, திண்டுக்கல்/பழனி, ஈரோடு, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரியும் ஸ்மைல் துணைத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் இந்தத் தகவலைத் தெரிவித்தார்
***
SMB/DL
(Release ID: 2080838)