கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பன்மாநில கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள்

Posted On: 04 DEC 2024 3:56PM by PIB Chennai

பன்மாநிலங்களின் கூட்டுறவு சங்க சட்டத்தின் கீழ் நாட்டில் 1702 மாநில கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  மொத்தமுள்ள 1702 மாநில கூட்டுறவு சங்கங்களில் 100 நிறுவனங்கள் செயல்படாமல் உள்ளன. 

   தவறான நிர்வாகம் மற்றும் நிதி மோசடிகள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, நிர்வாகத்தை வலுப்படுத்துவது, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை அதிகரிப்பது, தேர்தல் நடைமுறைகளை சீர்திருத்துவது போன்ற நடவடிக்கைகள் தற்போதுள்ள சட்டத்தை கூடுதலாக சேர்ப்பதன் மூலமும் தொண்ணூற்றி ஏழாவது அரசியலமைப்பு திருத்தத்தின் விதிகளை இணைப்பதன் மூலமும் மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம் மற்றும் விதிமுறைகள் முறையே 03.08.2023 மற்றும் 04.08.2023 அன்று விரிவான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டது.

மாநில கூட்டுறவு சங்கங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், நிதி முறைகேடுகளைத் தடுக்கவும் மேற்கண்ட திருத்தத்தின் மூலம் பல்வேறு விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

***

TS/SV/RR/KV/DL


(Release ID: 2080780) Visitor Counter : 23


Read this release in: English , Urdu , Hindi