தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
ரியாத்தில் நடைபெற்ற சர்வதேச நிகழ்வில் பல்வேறு பிரிவுகளில் இஎஸ்ஐசி நிறுவனம் 4 தகுதி சான்றிதழ்களை பெற்றது
Posted On:
04 DEC 2024 3:08PM by PIB Chennai
ரியாத்தில் சர்வதேச சமூக பாதுகாப்பு சங்கம் (ISSA) ஏற்பாடு செய்துள்ள ஆசியா, பசிபிக் பிராந்திய சமூக பாதுகாப்பு மன்ற (RSSF ஆசியா-பசிபிக்) நிகழ்வில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகமான இஎஸ்ஐசிக்கு (ESIC) அதன் மொபைல் செயலிக்கு ஒரு தகுதிச் சான்றிதழும், தொழில்சார் விபத்து - நோய், நிலையான முதலீட்டு அமைப்பு ஆகியவற்றிற்கான மூன்று தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த விருதுகளை தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சார்பில் தலைமை இயக்குநர் திரு. அசோக் குமார் சிங் பெற்றுக் கொண்டார்.
உலகளாவிய சமூக பாதுகாப்பு சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் இந்த விருதுகளும், சான்றிதழ்களும் இஎஸ்ஐசிக்கு வழங்கப்பட்டன. இந்தியாவின் உழைக்கும் மக்களுக்கு சுகாதார-சமூக பாதுகாப்பு சேவைகளை வழங்குவதில் புதுமை, செயல்திறன், சமூக உள்ளடக்கம் ஆகியவற்றிற்கு உறுதிப்பாட்டுடன் இஎஸ்ஐசி செயல்பட்டுவரும் நிலையில், அதற்கு இந்த சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
***
TS/PLM/AG/KV
(Release ID: 2080657)
Visitor Counter : 65