சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் – 2024
Posted On:
02 DEC 2024 7:41PM by PIB Chennai
அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் அதிகாரமளித்தலுக்கான பாதை ஆண்டுதோறும் டிசம்பர் 3-ம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்புகள் மற்றும் தலைமைத்துவப் பண்பைக் கொண்டாடும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை வளர்ப்பதற்கும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காக வாதிடுவதற்கும், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உலகளாவிய உறுதிப்பாட்டை இந்த நாள் நினைவூட்டுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்துதல் என்பதாகும்.
வரலாறு
1992-ம் ஆண்டு ஐ. நா. பொதுச் சபையின் 473-வது தீர்மானத்தின் மூலம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதையும், அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அவர்களின் நிலைமை குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2006-ம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்த மாநாடு (CRPD), நிலையான மேம்பாட்டு நடவடிக்கைகள் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேலும் மேம்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் முன்முயற்சிகள்
பல்வேறு கொள்கைகள் மற்றும் பிரச்சாரங்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை மேம்படுத்துவதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த முயற்சிகளில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன
மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை
மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் அதிகாரமளித்தலை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளில் கவனம் செலுத்தவும், அது சார்ந்த நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் விவகாரங்கள் என்ற தனித் துறை 2012-ம் ஆண்டு மே 12-ம் தேதி அன்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி அன்று இத்துறை மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை என மறுபெயரிடப்பட்டது. இத்துறை மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விஷயங்களில் சம்பந்தப்பட்ட பல்வேறு பங்குதாரர்களிடையே நெருக்கமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது உட்பட ஒருங்கிணைப்பு முகமையாக செயல்படுகிறது.
அணுகக்கூடிய இந்தியா பிரச்சாரம்
2015-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி அன்று தொடங்கப்பட்ட அணுகக்கூடிய இந்தியா பிரச்சாரம் (சுகம்யா பாரத் அபியான்), இந்தியா முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு (PwD) உலகளாவிய அணுகலை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்குவது, போக்குவரத்து அணுகலை மேம்படுத்துதல், அணுகக்கூடிய தகவல் மற்றும் தொடர்பு சூழல் அமைப்பை உருவாக்குதல் மற்றும் மொழிபெயர்ப்பாளர் பயிற்சி மற்றும் சிறந்த ஊடக ஆதரவு மூலம் சைகை மொழி அணுகலை விரிவுபடுத்துதல் ஆகியவை முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகள் ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2079884
-----
TS/SV/KPG/KV
(Release ID: 2080532)
Visitor Counter : 10