சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் குறித்த தகவல்
Posted On:
03 DEC 2024 3:33PM by PIB Chennai
இந்தியாவில் காசநோய் பாதிப்பு விகிதம் 2015 - ம் ஆண்டில் 100,000 மக்கள்தொகைக்கு 237 என்பதில் இருந்து 2023 - ம் ஆண்டில் 100,000 மக்கள்தொகைக்கு 195 ஆக 17.7% குறைந்துள்ளது
காசநோய் இறப்பு விகிதம் 2015 - ம் ஆண்டில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 28 என்பதில் இருந்து 2023 ல் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 22 ஆக 21.4% குறைந்துள்ளது
அறிவிக்கப்பட்டுள்ள காசநோய் பாதிப்பு குறித்த எண்ணிக்கை 2020- ம் ஆண்டில் 18.05 லட்சத்திலிருந்து 2023 - ம் ஆண்டில் 25.52 லட்சமாக அதிகரித்துள்ளது
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம், தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. காசநோய் ஒழிப்புக்கான தேசிய உத்திசார் திட்டத்தை (2017-25) நாடு முழுவதும் இது செயல்படுத்துகிறது.
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள்
• மாநில மற்றும் மாவட்ட அளவில் குறிப்பிட்ட உத்திசார் திட்டங்கள் மூலம் அதிக காசநோய் பாதிப்புள்ள பகுதிகளில் புதிய உத்திகளை மேற்கொள்வது .
• காசநோயாளிகளுக்கு இலவச மருந்துகள் மற்றும் நோய் கண்டறிதல் நடைமுறைகள்.
• முக்கிய பாதிக்கப்படக்கூடிய மற்றும் இணை நோயுற்ற மக்களில் பிரச்சாரங்கள் மூலம் காசநோய் பாதிப்பைக் கண்டறிதல் .
• ஆயுஷ்மான் சுகாதார சேவைகளுடன் காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகளை ஒருங்கிணைத்தல்.
• காசநோய் பாதிப்பு குறித்து அறிவிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் ஊக்கத்தொகையுடன் தனியார் துறை ஈடுபாடு.
• மூலக்கூறு கண்டறியும் ஆய்வகங்களை துணை மாவட்ட நிலைகளுக்கு விரிவுபடுத்துதல்.
• ஊட்டச்சத்து உணவுத் திட்டத்தின் கீழ் இத்திட்டத்தின் கீழ் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குதல்.
• அச்சத்தைக் குறைத்தல், சமுதாய விழிப்புணர்வை மேம்படுத்துதல் மற்றும் ஆரோக்கியத்தை நாடும் நடத்தையை மேம்படுத்த தீவிர கல்வி மற்றும் தகவல் தொடர்பு (IEC) நடவடிக்கைகள்
• காசநோயை ஒழிப்பதற்கான அமைச்சகங்களின் முயற்சிகள் மற்றும் ஆதாரங்களை ஒருங்கிணைத்தல்.
• காசநோயாளிகள் மற்றும் எளிதில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய மக்களிடையே காசநோய் தடுப்பு சிகிச்சை அளித்தல்.
• ஊட்டச்சத்து உணவுத் திட்டத்தின் இணையதளம் மூலம் அறிவிக்கப்பட்ட காசநோய் பாதிப்புகளைக் கண்காணிக்கவும்.
• நிக்ஷயா மித்ரா முன்முயற்சியின் கீழ் காசநோயாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து, நோயறிதல் மற்றும் தொழில்முறை ஆதரவை வழங்குதல்.
இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்ற தேசிய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் காசநோயின் பாதிப்பு விகிதம் 2015 - ம் ஆண்டில் 100,000 மக்கள்தொகைக்கு 237 என்பதில் இருந்து 2023 - ம் ஆண்டில் 100,000 மக்கள்தொகைக்கு 195 ஆக 17.7% குறைந்துள்ளது. காசநோய் இறப்புகள் 2015 - ம் ஆண்டில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 28 என்பதில் இருந்து 2023 - ம் ஆண்டில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 22 ஆக 21.4% குறைந்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://pib.gov.inPressReleasePage.aspxPRID=2080069
***
SV/KPG/DL
(Release ID: 2080386)
Visitor Counter : 33