கூட்டுறவு அமைச்சகம்
சஹாகர் பிரக்யா முன்முயற்சியின் வெற்றி
Posted On:
03 DEC 2024 3:39PM by PIB Chennai
கூட்டுறவு அமைச்சகம் தனது நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சட்டப்பூர்வ நிறுவனமான தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைப் பிரிவாக செயல்படும் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான லக்ஷ்மண்ராவ் இனாம்தார் தேசிய அகாடமி மூலம் சஹாகர் பிரக்யா முன்முயற்சியை செயல்படுத்துகிறது. சஹாகர் பிரக்யா, வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளில் முதன்மை கூட்டுறவுகளில் நிபுணத்துவத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. இது உதவி பெறும் கூட்டுறவுகளின் பணியாளர்கள் மற்றும் அதன் சொந்த அதிகாரிகளுக்கான தேவை அடிப்படையிலான திட்டங்களை வடிவமைத்து நடத்துகிறது. இது பயிற்சி மற்றும் வேளாண் வங்கியியல் சர்வதேச கூட்டுறவு மையம், ஆசியா மற்றும் பசிபிக் வேளாண் கூட்டுறவு கட்டமைப்பு மற்றும் பிற சர்வதேச முகமைகளுடன் இணைந்து இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கூட்டுறவுகளுக்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
2024-25-ம் நிதியாண்டில் 22-11-2024 வரை 156 பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அத்துடன் 2018-ம் ஆண்டு முதல் 1079 பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080077
-----
TS/IR/KPG/DL
(Release ID: 2080363)