கூட்டுறவு அமைச்சகம்
தொழில் நிறுவனங்களின் ஆதார திட்டமிடல் மென்பொருளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை இணைத்தல்
Posted On:
03 DEC 2024 3:37PM by PIB Chennai
நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும், சாதாரண மக்கள் வரை கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும் இந்தத் திட்டத்திற்கு அரசு 15.02.2023 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. பால்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து பஞ்சாயத்து கிராமங்களையும் உள்ளடக்கும் வகையில் புதிதாக 2 லட்சம் பல்நோக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பால்வளம் மற்றும் மீன்வள கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்படும். தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு), தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன். இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக, சம்பந்தப்பட்டவர்களுக்கான இலக்குகள் மற்றும் காலக்கெடுவைக் குறிக்கும் ஒரு நிலையான இயக்க நடைமுறை 19.09.2024 அன்று தொடங்கப்பட்டது.
தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை கணினிமயமாக்குவதன் மூலம் வலுப்படுத்தும் வகையில், ரூ.2,516 கோடி நிதி ஒதுக்கீட்டில், செயல்பாட்டில் உள்ள தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை கணினிமயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், செயல்படும் அனைத்து தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களையும் மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியுடன் இணைக்கும் வகையில், அனைத்து செயல்பாட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களையும் தொழில் நிறுவனங்களின் ஆதார திட்டமிடல் அடிப்படையிலான பொது தேசிய மென்பொருளின் கீழ் கொண்டு வருவது இன்றியமையாதது ஆகும். தொழில் நிறுவனங்களின் ஆதார திட்டமிடல் அடிப்படையிலான பொது தேசிய மென்பொருள், பொது கணக்கியல் முறை மற்றும் மேலாண்மை தகவல் அமைப்பு மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் செயல்திறன் திறம்பட மேற்கொள்ளப்படுகிறது.
30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 67,930 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை கணினிமயமாக்குவதற்கான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080074
----
TS/IR/KPG/DL
(Release ID: 2080361)
Visitor Counter : 19