சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பச்சிளம்குழந்தைகள் மற்றும் குழந்தைகளை மையமாகக் கொண்ட ஆராய்ச்சிப் பணிகளின் நிலை

Posted On: 03 DEC 2024 3:35PM by PIB Chennai

குழந்தைகளின் இறப்பு விகிதம் ஒற்றை இலக்கத்தை அடைவதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், செயல்படுத்தவும், கண்காணிக்கவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் "சங்கல்ப்" திட்டத்தை மேற்கொண்டுள்ளது.

குழந்தை இறந்து பிறப்பதைக் குறைப்பதற்கான விரிவான செயலாக்கத் தொகுப்பு மற்றும் பலன்கள் விநியோக உத்திகள் ஆகியவற்றின் உகந்த மாதிரியை உருவாக்கும் வகையில் ஆராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் குழந்தை இறந்து பிறப்பதைத் தடுப்பதற்கான தீர்வுகளை வகுப்பது மற்றும் சான்றாதாரங்களை திரட்டுவது குறித்த செயல்திட்டமானது கூட்டிணைவு அணுகுமுறையைக் கொண்டுள்ளது. இந்தியாவில் கர்ப்பிணி பெண்களை குழுவாக பகுப்பாய்வு செய்யும் அணுகுமுறையாக இது உள்ளது.

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் கருத்தரிப்பு, மகப்பேறு, பச்சிளம் குழந்தை, குழந்தை, வளர் இளம் பருவத்தினர் பருவ வயதினரில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து உத்திகளை அமல்படுத்த அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஆதரவு அளிக்கிறது.

பச்சிளம் குழந்தை இறப்பு குறித்த ஆராய்ச்சி தேசிய சுகாதார  ஆராய்ச்சிப் பணிகளில் உயர் முன்னிரிமைப் பணியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து பல முக்கிய ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

குழந்தைகளின் இறப்பு விகிதம் ஒற்றை இலக்கத்தை அடைவதற்கான இலக்கை வலுப்படுத்தவும், செயல்படுத்தவும், கண்காணிக்கவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) "சங்கல்ப்" திட்டத்தை மேற்கொண்டுள்ளது. பிறக்கும் போதே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் விரிவான நடவடிக்கைகளுக்கான தொகுப்பு மற்றும் பிரசவ உத்திகளின் உகந்த மாதிரியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியையும், இந்தியாவில் பிரசவத்தின் போது நிகழும் இறப்புக்களைத் தடுப்பதற்கான ஆதாரங்களை உருவாக்குதல் மற்றும் தீர்வுகளை வடிவமைக்கும் ஒரு திட்டத்தையும் இது மேற்கொண்டுள்ளது-

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தனது உயர் ஆராய்ச்சி மையங்கள் மூலம் பல செயலாக்க ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அண்மையில் 2024 - ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளில்படி, மேற்கத்திய தரவுகளுடன் ஒப்பிடும்போது இந்திய மக்கள்தொகைக்கு  குழந்தை பருவ சுவாச நோய்களின் குறிப்பிட்ட பிறழ்வு தொடர்பான சுயவிவரங்கள் வேறுபட்டவை என்பதை நிரூபிப்பதாக உள்ளது. இது குறைப்பிரசவம், பாக்டீரியா செப்சிஸ் சிகிச்சையில் குழந்தை சிறுநீரக நோய்கள் மற்றும் நரம்பு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பற்றிய முக்கியமான ஆய்வுகளையும் செய்தது.  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) குழந்தை வாழ்க்கையின் முதல் 1000 நாட்களுக்கு விரிவான கவனிப்பை வழங்குவதற்கான மாதிரியை வடிவமைத்து, செயல்படுத்தி, மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு முதல் ஆயிரம் நாள் வாழ்நாள் திட்டத்தையும் மேற்கொண்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நிறுவனம் மற்றும் இனப்பெருக்கம் மற்றும் குழந்தை ஆரோக்கியத்திற்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (என்.ஐ.ஆர்.ஆர்.சி.எச்), 2019 ம் ஆண்டு முதல் அரிவாள் செல் ரத்த சோகை நோயின் அதிக பாதிப்பைக் கொண்ட இந்தியாவின் ஆறு மாநிலங்களில் (ராஜஸ்தான், ஒடிசா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்) இத்திட்டம் குறித்து பன்முக ஆய்வை மேற்கொண்டது. ஐ.சி.எம்.ஆர்-என்.ஐ.ஆர்.ஆர்.சி.எச் மாநில சுகாதார அமைப்புடன் இணைந்து மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் கிராமப்புற தொகுதிகளில் ராஷ்டிரிய பால் ஸ்வஸ்திய கார்யக்ரம் (ஆர்.பி.எஸ்.கே) திட்டத்துடன் இணைந்து மக்கள் தொகை அடிப்படையிலான பிறப்பு குறைபாடு கண்காணிப்பு குறித்த ஆய்வு உள்ளிட்ட பிற ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளது.

இது தவிர, புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான பல திட்டங்களுக்கு ஐ.சி.எம்.ஆர் பல்வேறு மாநிலங்களுக்கு அதன் இடைநிலை, சிறிய மற்றும் தற்காலிக மானியங்களின் கீழ் நிதியளித்துள்ளது. 

பச்சிளம்குழந்தை மற்றும் குழந்தை சுகாதார ஆராய்ச்சி குறித்து தேசிய / மாநில குழந்தை மருத்துவ சங்கங்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள், தேசிய மற்றும் சர்வதேச அமைப்புக்கள் உள்ளிட்ட தொடர்புடைய பங்குதாரர்களுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்கிறது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ் இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080072

----

TS/SV/KPG/DL


(Release ID: 2080339) Visitor Counter : 40


Read this release in: English , Hindi