குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் டிசம்பர் 3 முதல் 7 வரை ஒடிசாவில் பயணம் மேற்கொள்கிறார்

Posted On: 02 DEC 2024 7:18PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2024 டிசம்பர் 3 முதல் 7 வரை ஒடிசாவில் பயணம் மேற்கொள்கிறார்.

டிசம்பர் 3 அன்று, பண்டிட் ரகுநாத் முர்முவின் புதிய சிலையை திறந்து வைக்கும் குடியரசுத் தலைவர், புவனேஸ்வரில் உள்ள ஆடிம் ஓவர் ஜார்பா ஜாஹரையும் பார்வையிடுவார்.

டிசம்பர் 4 அன்று பூரியில் உள்ள ஸ்ரீ ஜெகந்நாதர் கோவிலில் குடியரசுத்தலைவர் தரிசனம் செய்து  பூஜையில் ஈடுபடுகிறார். பூரியில் உள்ள கோபபந்து ஆயுர்வேத மகாவித்யாலயாவின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார்.  அன்றைய தினம் பூரியில் உள்ள நீலக்கொடி கடற்கரையில் நடைபெறும் கடற்படை தின கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

டிசம்பர் 5 அன்று, புவனேஸ்வரில் உள்ள ஒடிசா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 40-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் கலந்து கொள்கிறார். அதே நாளில், புவனேஸ்வரில் புதிய நீதித்துறை நீதிமன்ற வளாகத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

டிசம்பர் 6 அன்று  தேதி உபர்பேடாவில் மாணவர்கள் மற்றும் கிராம மக்களுடன் குடியரசுத் தலைவர் கலந்துரையாடுகிறார். அதே நாளில், ரைரங்பூரில் உள்ள மகிளா மகாவித்யாலயாவின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனும் அவர் கலந்துரையாடுகிறார்.

டிசம்பர் 7 அன்று தேதி குடியரசுத் தலைவர் பங்கிரிபோசி-கௌருமாஹிசானி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்  தொடங்கி வைக்கிறார். புராமரா-சாக்குலியா; மற்றும் பதம்பஹர்-கெந்துஜர்கர் ரயில் பாதைகள் இவற்றில் அடங்கும்.  பழங்குடியினர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், ரைரங்பூர்; தண்ட்போஸ் விமான நிலையம், ரைரங்பூர் மற்றும் துணைப்பிரிவு மருத்துவமனை, ரைரங்பூர் ஆகியவையும் இந்தத் திட்டங்களில் அடங்கும்.

-----

IR/KPG/DL


(Release ID: 2079931) Visitor Counter : 28