இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரம்பரிய விளையாட்டுக்களை ஊக்குவித்தல்

Posted On: 02 DEC 2024 6:35PM by PIB Chennai

'விளையாட்டு' ஒரு மாநில விஷயமாக இருப்பதால், பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவித்தல், அவை தொடர்பான போட்டிகளை நடத்துவது உள்ளிட்ட பொறுப்பு முதன்மையாக அந்தந்த மாநில / யூனியன் பிரதேச அரசுகளிடம் உள்ளது. முக்கியமான விஷயங்களில் ஆதரவு அளிப்பதன் மூலம் மத்திய அரசு மாநிலங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.

இருப்பினும், கேலோ இந்தியா திட்டத்தின் துணை அங்கமான 'கிராமப்புற, உள்நாட்டு, பழங்குடி விளையாட்டுகளை ஊக்குவித்தல்' அம்சம், நாட்டில் கிராமப்புற, உள்நாட்டு, பழங்குடி விளையாட்டுகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

மல்லர்கம்பம், களரிப்பயட்டு, கட்கா, தாங்-டா, யோகாசனம், சிலம்பம் போன்ற உள்நாட்டு, பாரம்பரிய விளையாட்டுகள் இந்த அம்சத்தின் கீழ் மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் இந்த விளையாட்டுகள் ஆண்டுதோறும் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு, இளைஞர் விளையாட்டுகளின் ஒரு பகுதியாக இடம்பெறும்.

இத்திட்டத்தின் கீழ், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், உபகரணங்கள் உதவி, பயிற்றுநர்கள் நியமனம், பயிற்றுநர்கள் பயிற்சி, வீரர்களுக்கு உதவித் தொகைகள் வழங்க மானியங்கள் வழங்கப்படுகின்றன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

*****


(Release ID: 2079923) Visitor Counter : 26


Read this release in: English , Urdu , Hindi