பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாடு அதிகரிப்பு

प्रविष्टि तिथि: 02 DEC 2024 4:07PM by PIB Chennai

எத்தனால் கலந்த பெட்ரோல் (EBP) திட்டத்தின் கீழ் பெட்ரோலில் எத்தனால் கலப்பதை அரசு ஊக்குவித்து வருகிறது, இதில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) பெட்ரோலுடன் கலந்து விற்பனை செய்கின்றன. எத்தனால் கலக்கும்திட்டத்தின் கீழ், பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது 2018-19-ம் ஆண்டில் 188.6 கோடி லிட்டரிலிருந்து 2023-24-ல் 700 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது, கலப்பு சதவீதம் 2018-19-ல் 5 ஆக இருந்த நிலையில் 2023-24-ல் உத்தேசமாக 14.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2019-ம் ஆண்டு முதல், எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்யும் சில்லறை விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2019-ம் ஆண்டில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் 43168 சில்லறை விற்பனை நிலையங்களில் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. இது 2024-ம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோலில் எத்தனால் கலப்பதை ஊக்குவிப்பதற்காக, எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருட்களை விரிவுபடுத்துதல், கரும்பு அடிப்படையிலான எத்தனால் கொள்முதல் செய்வதற்கான நிர்வகிக்கப்பட்ட விலை நடைமுறை, எத்தனால் உற்பத்திக்கான எத்தனால் வட்டி மானியத் திட்டங்கள், எத்தனால் ஆலைகளுடன் எண்ணெய் நிறுவனங்களின் நீண்டகால கொள்முதல் ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி இந்தத் தகவலைத் தெரிவித்தார்

****

 


(रिलीज़ आईडी: 2079908) आगंतुक पटल : 56
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi