சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு

Posted On: 02 DEC 2024 4:08PM by PIB Chennai

கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-ன் கீழ் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக நாட்டின் கடலோர மாநிலங்கள் மற்றும் தீவுகளில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அழிவை நோக்கிய அச்சுறுத்தல் உள்ள பல கடல் உயிரினங்கள் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972-ன் அட்டவணை I மற்றும் II-ல் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றுக்கு வேட்டையாடப்படுவதிலிருந்து பாதுகாப்பை சட்டம் வழங்குகின்றது.

வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-ல் திருத்தம் செய்து, இந்திய கடலோர காவல்படையினருக்கு நுழைவு, சோதனை, கைது மற்றும் தடுப்புக்காவலில் வைக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடல் ஆமைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் நோக்கில் தேசிய கடல் ஆமைகள் செயல் திட்டத்தை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986-ன் கீழ் பிரகடனம் செய்யப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019-ல், சதுப்பு நிலக்காடுகள், கடற்புற்கள், மணல் குன்றுகள், பவளப்பாறைகள், உயிரியல் ரீதியாக செயல்படும் சதுப்பு நிலங்கள், ஆமைகள் கூடு கட்டும் இடங்கள் மற்றும் குதிரைலாட நண்டுகளின் வாழ்விடங்கள் போன்ற சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை திட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் உள்ளிட்ட வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசின் நிதியுதவி பெற்ற 'வனவிலங்கு வாழ்விட மேம்பாடு' திட்டத்தின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சகம் நிதி உதவி வழங்குகிறது.

பவளப்பாறைகள் மற்றும் சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாப்பதற்காக கடல்சார் மாநிலங்களுக்கு மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களின் கீழ் அமைச்சகம் நிதி வழங்குகிறது.

தேசிய இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்தின் கீழ் உள்ள அமைச்சகம் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான நிதி ஆதரவை வழங்குகிறது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2079735

-----

TS/PKV/AG/DL


(Release ID: 2079886) Visitor Counter : 49


Read this release in: English , Urdu , Hindi , Telugu