தேசிய மனித உரிமைகள் ஆணையம்
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வார ஆன்லைன் குறுகிய கால உள்ளகப் பயிற்சி நிறைவு
Posted On:
02 DEC 2024 3:40PM by PIB Chennai
இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி) ஏற்பாடு செய்திருந்த இரண்டு வார ஆன்லைன் குறுகிய கால உள்ளகப் பயிற்சித் திட்டம் நிறைவடைந்துள்ளது. இந்தப் பயிற்சி 2024, நவம்பர் 18 அன்று தொடங்கி இருந்தது. நாட்டின் பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 52 மாணவர்கள் இந்தப் பயிற்சியை நிறைவு செய்தனர்.
நிறைவு விழாவில் உரையாற்றிய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தற்காலிகத் தலைவர் திருமதி விஜயபாரதி சயானி, ஆணையத்துடனான உள்ளகப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களைப் பாராட்டினார். ஒவ்வொரு தனிநபரின் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் பயிற்சியாளர்கள் திட்டத்தின் போது பெறப்பட்ட அறிவுத் திறன்களை முன்னெடுத்துச் செல்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கு, அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க மனித உரிமை பாதுகாவலர்களாக உருவாக வேண்டும் என்றும் அவர்களை ஊக்குவித்தார். இரக்கம், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கான உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றை உள்ளடக்குவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமைச் செயலாளர் திரு பரத் லால் பேசுகையில், பயிற்சி மாணவர்கள் இனி தாங்கள் மேற்கொள்ளும் மனித உரிமைகளுக்காக நடவடிக்கைகளில் அவர்கள் இந்தப் பயிற்சியில் கற்றுக் கொண்டதைபிரதிபலிக்க வேண்டும் என்று கூறினார். அடிப்படை மனித விழுமியங்களை உள்வாங்கவும், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தின் கொள்கைகளை நிலைநிறுத்தவும், சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை வளர்ப்பதில் தீவிரமாக பணியாற்றவும் பயிற்சியாளர்களை அவர் ஊக்குவித்தார்.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் இணைச் செயலாளர் திரு. தேவேந்திர குமார் நிம், உள்ளகப் பயிற்சி அறிக்கையை சமர்ப்பித்தார். என்.எச்.ஆர்.சி- யின் மூத்த அதிகாரிகள், வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளால் மனித உரிமைகளின் பல்வேறு அம்சங்கள் குறித்த பயிற்சி அமர்வுகள் நடத்தப்பட்டன. இவைதவிர, பயிற்சியாளர்கள் டெல்லியில் உள்ள மண்டோலி சிறை, காவல் நிலையம் மற்றும் ஆஷா கிரண் தங்குமிடம் இல்லம் ஆகியவற்றிற்கு மெய்நிகர் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டனர். பல்வேறு அரசு நிறுவனங்களின் செயற்பாடுகள், மனித உரிமைகள் பாதுகாப்பு நடைமுறைகள், கள யதார்த்தங்கள் மற்றும் சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேவைகள் பற்றிய புரிதல் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
புத்தக விமர்சனம், குழு ஆராய்ச்சி திட்ட விளக்கக்காட்சி மற்றும் அறிவிப்பு போட்டி ஆகியவற்றின் வெற்றியாளர்களையும் திரு நிம் அறிவித்தார். இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் வீரேந்தர் சிங் நன்றியுரை வழங்கினார்.மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2079718
***
TS/MM/RS/KR/DL
(Release ID: 2079865)
Visitor Counter : 29