சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீடித்த வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பழங்குடியினர் தங்குமிடங்கள் அமைத்தல்

प्रविष्टि तिथि: 02 DEC 2024 5:32PM by PIB Chennai

அதிகம் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் மேம்பாட்டிற்கான பிரதமரின் திட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுலா அமைச்சகத்தின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் பழங்குடியினர் தங்கும் விடுதிகளை மேம்படுத்தும் முயற்சிக்கு அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.  ஒரு வீட்டிற்கு ரூ.5 லட்சம் வரை (புதிய கட்டுமானத்திற்கு), ரூ.3 லட்சம் வரை (புதுப்பித்தல்) மற்றும் கிராம சமூக தேவைக்கு ரூ.5 லட்சம் வரை ஆதரவுடன் 1000 தங்குமிடங்கள் மேம்பாட்டுப் பணிகள் அடங்கும். இந்த முயற்சியை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் கலந்தாலோசிப்பது உட்பட, மத்திய அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

---

IR/KPG/DL


(रिलीज़ आईडी: 2079846) आगंतुक पटल : 50
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi