கலாசாரத்துறை அமைச்சகம்
நாட்டில் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள்/பகுதிகள்
Posted On:
02 DEC 2024 5:28PM by PIB Chennai
பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம், 1958-ல் நாட்டில் 3697 பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என அறிவிக்கப்பட்ட இந்த நினைவுச் சின்னங்கள் மற்றும் இடங்களை அவற்றின் அசல் தன்மையில் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதற்காக இந்திய தொல்லியல் துறை (ஏ.எஸ்.ஐ) பராமரிக்கிறது.
2013-ம் ஆண்டில் மேக வெடிப்பு காரணமாக சேதமடைந்த உத்தராகண்ட் ருத்ரபிரயாக் மாவட்டம் கேதார்நாத் கோயில், இந்திய தொல்லியல் துறையால் மீட்டெடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 412 இடங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவு சின்னங்களாக திகழ்கின்றன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
PKV/AG/DL
(Release ID: 2079814)
Visitor Counter : 52