கலாசாரத்துறை அமைச்சகம்
மகாபாரத காலத்தின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்
Posted On:
02 DEC 2024 5:25PM by PIB Chennai
இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் மீரட்டின் ஹஸ்தினாபூரில் ஒரு பாதுகாக்கப்பட்ட தளத்தைக் கொண்டுள்ளது. இது 2021-22-ம் ஆண்டில் ஐந்து 'சிறப்பு வாய்ந்த தளங்களில்' ஒன்றாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
சமீப காலங்களில் அப்பகுதியை பிரதான சாலையுடன் இணைக்கும் நடைபாதைகள் அமைத்தல், வாகன நிறுத்துமிடம், தோட்டங்கள் அமைத்தல் மற்றும் அத்தியாவசிய பொது வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டுகளில் ஹஸ்தினாபூர் தளத்தில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் அகழ்வாராய்ச்சி குறித்த புகைப்பட கண்காட்சி மற்றும் கண்டுபிடிப்புகள் அந்த இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
PKV/AG/DL
(Release ID: 2079812)
Visitor Counter : 28