அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியலுக்கும், சமூகத்திற்கும் இடையே ஒரு பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன
Posted On:
02 DEC 2024 10:12AM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பியலாளர்கள் மாநாட்டை சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.ஏ.ஐ.ஆர் முன்னாள் இயக்குநர் டாக்டர் மனோஜ் குமார் பட்டாரியா மற்றும் சி.எஸ்.ஐ.ஆர்-சி.இ.சிஆர்.ஐ இயக்குநர் டாக்டர் கே. ரமேஷா ஆகியோர் முன்னிலையில் விஞ்ஞான பாரதியின் தேசிய அமைப்புச் செயலாளர் டாக்டர் ஷிவ் குமார் சர்மா தொடங்கி வைத்தார். இந்திய சர்வதேச அறிவியல் விழா 2024 இன் நிகழ்வான எஸ் & டி மீடியா மாநாட்டில் வேலைவாய்ப்பு செய்தி இதழ் மற்றும் அறிவியல் இந்தியா இதழின் பிரதிகள் இந்த விருந்தினர்களால் வெளியிடப்பட்டன. இந்தியாவின் இந்த மிகப்பெரிய அறிவியல் விழா நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை ஐ.ஐ.டி குவஹாத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய மின்-வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கே.ரமேஷா தனது உரையில், "ஐ.ஐ.எஸ்.எஃப் என்பது ஒரு அறிவியல் திருவிழாவாகும். மக்களிடம் ஆராய்ச்சிகளை எடுத்துச் செல்ல ஊடகங்கள் உதவுகின்றன. விஞ்ஞானிகளால் செய்யப்படும் ஆராய்ச்சிகள் பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்களால் புரிந்து கொள்ளப்படுகின்றன. ஊடகங்கள் ஆராய்ச்சியை பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஆக்கபூர்வமான வழிகளில் எடுத்துச் செல்லுமாறு ஐ.ஐ.எஸ்.எஃப் கேட்டுக்கொள்கிறது. ஆராய்ச்சியை மக்களுக்குத் தெரிவிப்பதில் ஊடகங்கள் முக்கியமானவை”, என்று கூறினார்.
சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.ஏ.ஐ.ஆர் முன்னாள் இயக்குநர் டாக்டர் மனோஜ் குமார் பட்டாரியா கூறுகையில், "ஆர்வம், பகுப்பாய்வு, பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய முறையில் அறிவியல் செயல்படுகிறது. ஊடகங்களுக்கும் இது பொருந்தும், இந்த வழியில், ஊடகம் மற்றும் அறிவியலின் செயல்முறை ஒன்றுதான்”, என்று குறிப்பிட்டார்.
விஞ்ஞான பாரதியின் தேசிய அமைப்புச் செயலாளர் டாக்டர் ஷிவ்குமார் சர்மா கூறுகையில், "அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருத்துகளைப் புரிந்துகொள்வதற்கும் விளக்குவதற்கும் இடையே குறிப்பிடத்தக்க இடைவெளி இருப்பதை நான் உணர்ந்தேன். இந்த இடைவெளியைக் குறைக்க, சிக்கலான கருத்துக்களை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் நாம் தொடர்பு கொள்ள வேண்டும். இதற்கு நாம் எதைத் தெரிவிக்க விரும்புகிறோம், அதை எவ்வாறு திறம்பட தெரிவிப்பது என்பதைக் கருத்தில் கொண்டு சிந்திக்கும் அணுகுமுறை தேவைப்படுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான முறையான வழிகளை உருவாக்குவதன் மூலமும், ஊடகங்களின் சக்தியை மேம்படுத்துவதன் மூலமும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு மற்றும் புரிதலை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைய முடியும்”, என்று கூறினார்.
இந்த மாநாட்டில் அசாம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் டாக்டர் அரூப் மிஸ்ரா, மணிப்பூர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் இயக்குநர் டாக்டர் மினகேதன் சிங், அசாம் அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் கவுன்சில் இயக்குநர் டாக்டர் ஜெய்தீப் பருவா மற்றும் மிசோரம் அறிவியல் கவுன்சிலின் மூத்த அறிவியல் அதிகாரி டாக்டர் டேவி மற்றும் கிதாலி சைகியா போன்ற நிபுணர்கள், அறிவியல் சார்ந்த பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். .
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2079616
***
(Release ID: 2079616)
TS/IR/KPG/KR
(Release ID: 2079741)
Visitor Counter : 22