மத்திய அமைச்சரவை
இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் துவக்கம்
Posted On:
25 NOV 2024 8:39PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் ஒரு முழுமையான மத்திய நிதியுதவித் திட்டமாக இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தை தொடங்க ஒப்புதல் அளித்தது.
இந்தத் திட்டமானது 15வது நிதிக் குழு (2025-26) வரை மொத்தம் ரூ.2481 கோடி (இந்திய அரசின் பங்கு - ரூ.1584 கோடி; மாநிலப் பங்கு - ரூ.897 கோடி) ஆகும்.
விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ், ஒரு முழுமையான மத்திய நிதியுதவி திட்டமாக நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தை இயக்கம் முறையில் ஊக்குவிக்க இந்திய அரசு இயற்கை வேளாண்மைக்கான தேசிய பணியைத் தொடங்கியுள்ளது.
தங்கள் முன்னோர்களிடமிருந்து பெறப்பட்ட பாரம்பரிய அறிவில் வேரூன்றி, விவசாயிகள் இயற்கை விவசாயத்தை ரசாயனமில்லாத விவசாயமாக மேற்கொள்வார்கள். இதில் உள்ளூர் கால்நடைகள் ஒருங்கிணைந்த இயற்கை விவசாய முறைகள், பல்வகைப்பட்ட பயிர் முறைகள் போன்றவை அடங்கும்.
அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை வழங்குவதற்காக இயற்கை விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. சாகுபடிக்கான உள்ளீடு செலவைக் குறைப்பதற்கும், வெளியில் வாங்கப்பட்ட இடுபொருட்களைச் சார்ந்திருப்பதற்கும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கை வேளாண்மை, ஆரோக்கியமான மண் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி பராமரிக்கும், பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்கும். பல்வேறு பயிர் முறைகளை ஊக்குவித்து, உள்ளூர் வேளாண் சூழலுக்கு ஏற்றவாறு, செயல்படுத்துவது இயற்கை வேளாண்மையின் பயன்களாகும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்த இயக்கம் கிராம பஞ்சாயத்துகளில் 15,000 இடங்களில் செயல்படுத்தப்படும், அவை 1 கோடி விவசாயிகளை சென்றடையும். 7.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை விவசாயத்தை தொடங்கும்.
****
PKV/DL
(Release ID: 2079517)
Visitor Counter : 46
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam