தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அறங்காவலர் வாரியத்தின் (CBT), 236 - வது கூட்டம் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா  தலைமையில் நடைபெற்றது

Posted On: 30 NOV 2024 5:22PM by PIB Chennai

 

மத்திய அறங்காவலர் வாரியத்தின் 236-வது கூட்டத்திற்கு மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சரும், மத்திய அறங்காவலர் வாரியத்தின், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் துணைத் தலைவருமான செல்வி ஷோபா கரண்ட்லஜே, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளரும், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் மத்திய தொழில்நுட்ப அமைப்பின் துணைத் தலைவருமான திருமதி சுமிதா தவ்ரா, மத்திய வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆணையர் மற்றும் உறுப்பினர் செயலர் திரு. ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மத்திய அறங்காவலர் வாரியத்தின் கடைசி கூட்டத்திற்குப் பிறகு தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு எடுத்த முக்கிய முடிவுகள் குறித்து வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டது. தானியங்கி முறையில் உரிமைத் தொகை மீதான கோரிக்கைகளுக்கு சேமநல நிதியில் சேமிக்கப்பட்டுள்ள தொகைகளை வழங்கும் வசதியைப் பெறுவதற்கான உச்சவரம்புத் தொகை 50,000 ரூபாயிலிருந்து  1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், இது வீட்டுவசதி, திருமணம், கல்வி போன்ற செலவுகளுக்கான முன்பணத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், 1.15 கோடி ரூபாய் அளவிலான உரிமை கோரல் மனுக்களுக்கு தானியங்கி முறையில் தீர்வு செய்யப்பட்டுள்ளன. 2024 - ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உரிமை கோரல் மனுக்களின் நிராகரிப்பு விகிதம் 14% ஆக குறைந்துள்ளதற்கு வாரியம் பாராட்டு தெரிவித்துள்ளது.

2023-24 - ம் நிதியாண்டில், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு 1.82 லட்சம் கோடி ரூபாய்க்கான  4.45 கோடி உரிமை கோரல் விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டது. நடப்பு நிதியாண்டில், 1.57 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் 3.83 கோடி ரூபாய்க்கான உரிமை கோரல் விண்ணப்பங்களுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளன.

CITES 2.01 திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் [EPFO] வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2.01 புதிய இயக்க முறைமை பயன்படுத்தப்படுகிறது, இது இழப்பீட்டுச் செயல்முறையை எளிதாக்கும். புதிய மென்பொருள் தொகுப்பு பொதுவான கணக்கு எண் (யுஏஎன்) அடிப்படையிலான கணக்கியலை சாத்தியமாக்கும், இதன் விளைவாக ஒரு உறுப்பினர், ஒரு கணக்கு முறை உருவாகும், இதன் மூலம் இழப்பீடு தீர்ப்பதில் உறுப்பினர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறையும்.

சீர்திருத்தம் குறித்த ஆலோசனைகளுக்குப் பின்னர் மத்திய அறங்காவலர் வாரியத்தின் கூட்டத்தில் பல முன்னோடி முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் வாரியம் எடுத்த முக்கிய முடிவுகள் வருமாறு:

உறுப்பினர்களின் நலனுக்கான முடிவுகள்:

•          தொழிலாளர் சேமநல நிதிச் சட்டம் 1952 - ன் பிரிவு 60 (2) (பி) - ன் குறிப்பிடத்தக்க திருத்தத்திற்கு மத்திய அறங்காவலர் வாரியம் ஒப்புதல் அளித்தது. தற்போதுள்ள விதிகளின்படி, மாதத்தின் 24- ம் தேதி வரை தீர்க்கப்பட்ட உரிமைகோரலுக்கு, முந்தைய மாத இறுதி வரை மட்டுமே வட்டி செலுத்தப்படும். இனி செட்டில்மென்ட் தேதி வரை உறுப்பினருக்கு வட்டி வழங்கப்படும். இதன் மூலம் உறுப்பினர்களுக்கு நிதிப் பயன் கிடைப்பதுடன், குறைகளும் குறையும்.

தற்போது வரை, உறுப்பினர்களுக்கு வட்டி இழப்பைத் தவிர்ப்பதற்காக மாதந்தோறும் 25 ஆம் தேதி முதல் இறுதி வரை வட்டி தொடர்பான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படவில்லை. இந்த முடிவுக்குப் பிறகு, இந்த கோரிக்கைகள் முழு மாதத்திற்கும் செயலாக்கப்படும், இது நிலுவையில் உள்ள உரிமை கோரல் விண்ணப்பங்கள் எண்ணிக்கை குறைக்கப்படும். சரியான நேரத்தில் தீர்வு, வளங்களின் சிறந்த பயன்பாடு ஆகியவற்றிற்கு இது வழிவகுக்கும். திறமையான, வெளிப்படையான மற்றும் உறுப்பினரை மையமாகக் கொண்ட சேவை வழங்கலுக்கான தொழிலாளர் சேமநல நிதி  அமைப்பின் [EPFO] உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2079391

*****

VS/KV

 

 

 

 

 


(Release ID: 2079410) Visitor Counter : 139
Read this release in: English , Urdu , Hindi , Gujarati