சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம் தொடர்பான முன் நிகழ்வுகள் - ஆந்திராவில் 5 இடங்களில் நாளை நடைபெறுகிறது

Posted On: 30 NOV 2024 3:16PM by PIB Chennai

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம் விழா 2024 தொடர்பான முன் நிகழ்வுகளை, மத்திய சுற்றுலா அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், ஜவுளி அமைச்சகம் ஆகியவை ஆந்திரப் பிரதேச அரசுடன் இணைந்து, 2024 டிசம்பர் 01 அன்று நடத்தவுள்ளன. கலாச்சார ரீதியாக வளமான இந்த இசை நிகழ்ச்சிகள் ஆந்திரா முழுவதும் ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடத்தப்படும். இது இசை, பாரம்பரியம், பக்தியை ஒன்றிணைத்து பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கும்.

கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம், தெலுங்கு கலாச்சாரத்தின் வளமான  மரபுகளைக் கொண்டாடுகிறது. இது புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்கள், கைத்தறி தயாரிப்புகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், இளைய தலைமுறையினருக்கு இந்த புகழ்பெற்ற பாரம்பரியங்களைக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இப்போது அதன் இரண்டாவது பதிப்பில், இந்த ஆண்டின் கிருஷ்ணவேணி சங்கீத நீரரஜனம் மைசூரு சங்கீத சுகந்தாவின் வெற்றியைத் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இந்திய இசையின் ஆழமான பாரம்பரியத்தை எதிரொலிக்கும் சில சிறந்த பாரம்பரிய இசைக்கலைஞர்களின் கலைத்திறனைக் காண இந்த நிகழ்வுகள் ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை இது வழங்கும்.

ஒவ்வொரு கச்சேரியும் தனித்துவமான கலாச்சார அடையாளத்தைக் கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் முக்கிய கோயில்கள், பாரம்பரிய தளங்களின் ஆன்மீக சூழலில் பார்வையாளர்களை இது கவரும்.

முன்நிகழ்வுகளின் அட்டவணை

ஸ்ரீகாகுளம்:

இடம்: ஸ்ரீ சூரியநாராயண சுவாமி வாரி தேவஸ்தானம், அரசவல்லி, ஸ்ரீகாகுளம்

நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை

கலைஞர்: மண்டா சுதா ராணி

ராஜமகேந்திரவ் (ராஜமுந்திரி):

இடம்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னம் கலா கேந்திரம், சேஷய்யா மேட்டா, ராஜமகேந்திரவ்

நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை

கலைஞர்: துளசி விஸ்வநாத்

மங்களகிரி:

இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், மெயின் ஆர்.டி, மங்களகிரி, குண்டூர் (மாவட்டம்), ஆந்திரா.

நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை

தீம்: நரசிம்ம சுவாமி பற்றிய கிருதிகள்

கலைஞர்கள்: எம்.நாராயணசர்மா, எம்.யமுனா ராமன்

அஹோபிலம்:

இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், அஹோபிலம் - 518545, நந்தியால் (மாவட்டம்)

நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை

கலைஞர்: தீபிகா வரதராஜன்

திருப்பதி:

இடம்: ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம், மகளிர் பல்கலைக்கழகம், திருப்பதி

நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை

கலைஞர்: பாலகிருஷ்ண பிரசாத் காரு

கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம் விழா பற்றி:

பாரம்பரியத்தையைத் அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்களையும் ஊக்குவிக்க குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதை நோக்கிய முயற்சியாக, கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனத்தின் இசை விழாவானது, பாரம்பரிய இசையின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடுவதையும், ஹரிகதை, நாமசங்கீர்த்தனா ஆகிய மரபுகளில் கவனம் செலுத்த உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம் 2024 இசை விழா என்பது 2024 டிசம்பர் 6 முதல் 8 வரை மூன்று நாள் நிகழ்வாகும். இந்த 3 நாள் நிகழ்வு விஜயவாடாவில் நடைபெறவுள்ளது. இது கர்நாடக இசைக்கு ஆந்திராவின் பங்களிப்பையும் மாநிலத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் கொண்டாடுகிறது. திருவிழாவின் இந்த இரண்டாவது பதிப்பு இப்பகுதியின் பாரம்பரிய கலைகள், கைவினைப்பொருட்கள், ஜவுளிகளை மேலும் பிரபலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இது ஆந்திராவை ஒரு முக்கிய கலாச்சார இடமாக நிலை நிறுத்துகிறது.

*****

PLM/KV

 

 

 


(Release ID: 2079374) Visitor Counter : 29


Read this release in: English , Urdu , Hindi , Punjabi