நிதி அமைச்சகம்
பீகார் மாநிலம் மதுபானியில், மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி
Posted On:
30 NOV 2024 2:28PM by PIB Chennai
பீகார் மதுபானியில், அம்மாநிலத் துணை முதலமைச்சர் திரு. சாம்ராட் சவுத்ரி முன்னிலையில், கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) ஸ்ரீ ராம்பிரீத் மண்டல்; திரு சஞ்சய் குமார் ஜா; டாக்டர் அசோக் குமார் யாதவ்; மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) திரு வினோத் நாராயண் ஜா; ஸ்ரீ சுதான்ஷு சேகர்; மற்றும் ஸ்ரீ கன்ஷ்யாம் தாக்கூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிதிச் சேவைகள் துறை (DFS) செயலாளர் திரு. எம். நாகராஜு, நபார்டு வங்கித் தலைவர் திரு கே வி ஷைஜி; சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா தலைவர் திரு எம்.வி.ராவ்,; இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் திரு மனோஜ் மிட்டல்; நிதிச் சேவைகள் துறைத் தலைவர் கூடுதல் செயலாளர் திரு எம்.பி.டாங்கிராலா மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் மாவட்ட மேலாண்மை இயக்குநர் திரு சுரிந்தர் ராணா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மதுபானி நகருக்கு வருகை தந்ததற்காக மத்திய நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்த திரு சாம்ராட் சௌத்ரி, குறிப்பாக அப்பகுதியில் பொருளாதார வளர்ச்சிக்கான மத்திய நிதியமைச்சரின் மேற்பார்வையில் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
கடனுதவி குறித்த விழிப்புணர்வு திட்டத்தில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சில மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டத்தின் (ஏபி பிஎம்-ஜேஏஒய்) அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.
பல்வேறு வங்கிகள் மூலம் 50,294 பயனாளிகளுக்கு 1,121 கோடி ரூபாய் அளவிற்கு கடன் வழங்கப்பட்டது.
பல்வேறு ஊரக சாலை திட்டங்களுக்கு நபார்டு மற்றும் சிட்பி வாயிலாக முறையே 155.84 கோடி ரூபாய் மற்றும் 75.52 லட்சம் ரூபாய் அளவிற்கு அனுமதி அளிக்கப்பட்டன.
பின்னர், வங்கிகள் மற்றும் நபார்டு வங்கியால் கடனுதவி அளிக்கப்பட்ட தொழில்முனைவோரின் பல்வேறு உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட சுமார் 25 அரங்குகளை திருமதி சீதாராமன் பார்வையிட்டார்.
மைதிலி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தலா ஐந்து அரசியல் சாசன பிரதிகளை மத்திய நிதியமைச்சர் வழங்கினார்.
பள்ளிகளில், குறிப்பாக மகளிர் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் வங்கிகள், பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கியுள்ளன. ஆம்புலன்ஸை வாகனத்தையும் மத்திய நிதியமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2079337
*****
VS/KV
(Release ID: 2079337)
(Release ID: 2079357)
Visitor Counter : 57