ஊரக வளர்ச்சி அமைச்சகம்
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் தலைமை தாங்கினார்
Posted On:
29 NOV 2024 6:24PM by PIB Chennai
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தை செயலாக்குவது மற்றும் செயல்திறன் குறித்து ஆய்வு செய்வதற்காக புதுதில்லி கிருஷி பவனில் நடைபெற்ற கூட்டத்திற்கு மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் மற்றும் இதர உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஊரக வேலை உறுதி திட்டத்தில் செயல்திறன் குறித்து பாராட்டிய அமைச்சர் அதனை மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு தேவையான சீர்திருத்தங்கள் மற்றும் புத்தாக்கங்களை மேற்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தினார். இத்திட்டத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடமையை வலுப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க வேலை அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்குவதை உறுதிசெய்தல், பணியிடங்களில் எந்திரங்களை பயன்படுத்துவதை தடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2024-25-ம் நிதியாண்டில் கணிசமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மொத்தம் 187.5 கோடி பணியாளர் நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 4.6 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 56 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது ஊரக உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் இத்திட்டத்தின் பங்கை பிரதிபலிக்கின்றன. பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்குவதை உறுதிசெய்யும் வகையில் 97 சதவீத நிதி மாற்று ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இத்திட்டத்தை சுமூகமாக செயல்படுத்துவதற்காக, 74,770.02 கோடி ரூபாய், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் உத்தரப்பிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, பீகார், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு மிக அதிக அளவிலான நிதி இத்திட்டத்திற்காக மத்திய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இத்திட்டத்தின் பெண்களின் பங்களிப்பு தொடர்ச்சியாக 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து வந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2079129
***
TS/PKV/AG/DL
(Release ID: 2079204)
Visitor Counter : 5