பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
குழந்தைகள் பராமரிப்பு சேவைகளை அங்கன்வாடி மையம் மூலம் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் விரிவுபடுத்தியுள்ளது
Posted On:
29 NOV 2024 4:22PM by PIB Chennai
பெண்களின் கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அரசின் தொடர்ச்சியான முன்முயற்சிகள் அவர்களின் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளன. மேலும் அதிகமான பெண்கள் இப்போது வேலைக்கு செல்கின்றனர். வளர்ந்து வரும் தொழில்மயமாக்கலும் நகரமயமாக்கலும், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயர்வதை அதிகரிக்க வழிவகுத்தன. கடந்த சில ஆண்டுகளில் தனி குடும்பங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. எனவே, முன்பு வேலையில் இருந்தபோது கூட்டுக் குடும்பங்களின் ஆதரவைப் பெற்று வந்த அத்தகைய உழைக்கும் பெண்களின் குழந்தைகளுக்கு இப்போது பகல்நேர குழந்தைப் பராமரிப்பு இல்லங்கள் சேவைகள் தேவைப்படுகின்றன. அவை குழந்தைகளுக்கு தரமான பாதுகாப்பை வழங்க வேண்டும்.
முறையான பகல்நேர பராமரிப்பு சேவைகள் இல்லாதது, பெரும்பாலும், பெண்கள் வெளியே சென்று வேலை செய்வதைத் தடுக்கிறது. எனவே, ஒழுங்கமைக்கப்பட்ட அல்லது அமைப்புசாரா துறைகளில் உள்ள அனைத்து சமூகப் பொருளாதார நிலையில் உள்ள பணிபுரியும் பெண்களுக்கான பகல்நேர குழந்தைகள் காப்பகங்கள் தேவைப்படுகிறது.
உழைக்கும் தாய்மார்களின் குழந்தை பராமரிப்பு சிரமங்களை நிவர்த்தி செய்வதற்காக, பகல்நேர பராமரிப்பு குழந்தைகள் காப்பக வசதிகள் வழங்கப்படுகின்றன. கிரெஷ் சேவைகள் இதுவரை வீட்டு வேலையின் ஒரு பகுதியாகக் கருதப்பட்ட குழந்தை பராமரிப்பு பொறுப்புகளை முறைப்படுத்துகின்றன.
அங்கன்வாடி மையங்கள் உலகின் மிகப்பெரிய குழந்தை பராமரிப்பு மையங்களாகும். அவை கடைசி நிலை வரை பராமரிப்பு வசதிகள் வழங்குவதை உறுதிசெய்ய அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. முதல் முறையாக, அமைச்சகம் அங்கன்வாடி மூலமாகவும் குழந்தைகள் காப்பகத்தின் மூலமாகவும் குழந்தை பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. (AWCC). இது குழந்தை பராமரிப்பு ஆதரவை உறுதி செய்யும்.
பால்னா (Palna) திட்டத்தின் நோக்கம், ஊட்டச்சத்து ஆதரவு, குழந்தைகளின் ஆரோக்கியம், அறிவாற்றல் வளர்ச்சி, நோய்த்தடுப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தரமான குழந்தைகள் காப்பக வசதியை வழங்குவதாகும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தங்கள் பங்கை வழங்குவதற்கு அந்தந்த மாநில அரசுகள்யூனியன் பிரதேச நிர்வாகங்களிடமிருந்து, முன்மொழிவுகள் பெறப்படுகின்றன. பல்வேறு மாநிலங்கள்யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட பரிந்துரைகளின்படி, இதுவரை மொத்தம் 10,609 அங்கன்வாடி குழந்தைகள் காப்பகங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
-----
TS/PLM/KPG/DL
(Release ID: 2079178)
Visitor Counter : 11