சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடு பற்றிய அண்மைத் தகவல்
प्रविष्टि तिथि:
29 NOV 2024 3:56PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் எனப்படும் பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டத்தை மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது. இதனால் சமூக பொருளாதார அந்தஸ்த்தை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருடத்திற்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சைக்கான பலன்களை வழங்கிட இப்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய சுகாதார பலன் தொகுப்புத் திட்டத்தின் தேசிய ஆவணத்தின்படி, 23 மருத்துவ சிறப்பு பிரிவுகளின் கீழ் உள்ள 1961 சிகிச்சை செயல்முறைகள் ரொக்கம் செலுத்த தேவையில்லாத சுகாதார சேவைகளாக வழங்கப்படுகின்றன.
இம்மாதம் 25-ம் தேதி வரையிலான தரவுகளின் படி இந்தத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான 14 லட்சம் ஆயுஷ்மான் வே வந்தனா அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதற்கான ரூ.3437 கோடி மொத்த மதிப்பீட்டில் ரூ.2165 கோடி முறையே 2024-25 மற்றும் 2025-26 நிதியாண்டுகளில் மத்திய பங்களிப்பாக இருக்கும்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2079021
------
TS/LKS/KPG/KR/DL
(रिलीज़ आईडी: 2079134)
आगंतुक पटल : 81