iffi banner
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரபல இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது விக்ராந்த் மாஸிக்கு வழங்கப்பட்டது

கோவாவில் நடைபெற்ற 55-வது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில்  பிரபல இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது திரைப்பட நடிகர் விக்ராந்த் மாஸிக்கு வழங்கப்பட்டது. இந்திய சினிமாவில் அளப்பரிய பங்காற்றியதை அங்கீகரிக்கும் வகையில் கோவா மாநில முதலமைச்சர் திரு பிரமோத் சவந்த் மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ முன்னிலையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதை பெற்றுக் கொண்ட பின் பேசிய திரைப்பட நடிகர் விக்ராந்த் மாஸி, தனது திரைப்பட வாழ்க்கை பயணம் குறித்து உருக்கமாக எடுத்துரைத்தார். இந்த தருணம் தமக்கு சிறப்பு வாய்ந்த தருணம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விருதுக்கு தான் தேர்ந்தெடுக்கப்படுவோம் என தான் எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறினார். வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கங்களை கொண்டுள்ள போதிலும், நாம் எப்போதும் மீண்டும் பயணத்தை தொடங்க தயாராக இருக்க வேண்டுமென்றும், அத்தகைய குணநலன் தமக்கு ‘12th Fail’ என்ற திரைப்படத்தின் மூலம் பெற்றதாக கூறினார். ஒருவரது கனவுகள் பல்வேறு இடர்பாடுகளை கடந்து உச்ச நிலையை அடைந்ததற்கான சான்றாக திரைப்பட நடிகர் விக்ரம் மாஸியின் வாழ்க்கை பயணம் அமைந்துள்ளது.

***

(Release ID: 2078887)
TS/SV/RR/KR

 

iffi reel

(रिलीज़ आईडी: 2079067) आगंतुक पटल : 64
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Gujarati , English , Urdu , Konkani , हिन्दी , Marathi , Bengali , Assamese , Punjabi , Telugu