எஃகுத்துறை அமைச்சகம்
புத்தாக்கம் மற்றும் பசுமை எஃகு தொழில்நுட்பங்களை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
Posted On:
29 NOV 2024 11:23AM by PIB Chennai
இந்திய எஃகு ஆணைய நிறுவனம் (செயில்), ஒரு மகாரத்னா மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை எஃகு உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். சர்வதேச ஜான் காக்கரில் குழுமத்தின் இந்தியப் பிரிவான மும்பை ஜான் காக்கரில் இந்தியா நிறுவனத்துடன் (ஜெசிஐஎல்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், அதிநவீன தொழில்நுட்பங்கள், விரிவான தொழில் நிபுணத்துவம், புதுமை மற்றும் நிலைத்தன்மைக்கான பகிரப்பட்ட பார்வை உள்ளிட்ட இரு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பலத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. செயில் நிறுவனத்தின் இயக்குநர் (நிதி) திரு அனில் குமார் துல்சியானி, ஜான் காக்கரில் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (உலோகப் பிரிவு) திரு மைக்கேல் கோட்டாஸ் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
எஃகு குளிரூட்டல், செயலாக்கம், பசுமை எஃகு, சிலிக்கான் எஃகு ஆகியவை இந்த ஒத்துழைப்பின் மையமாக இருக்கும். கூடுதலாக, கூட்டாண்மை பசுமை தொழில்நுட்பங்களை இரும்பு மற்றும் எஃகு தயாரிப்பு செயல்முறைகளில் ஒருங்கிணைக்க முயல்கிறது. செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த தரமான எஃகு தயாரிப்பு தொழில்நுட்பங்களை இணைக்கிறது.
மேம்பட்ட, நிலையான தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் பாரம்பரிய இரும்பு மற்றும் எஃகு தயாரிப்பு நடைமுறைகளை மாற்றுவதற்கு செயில் நிறுவனம் உறுதியாக உள்ளது. கார்பன் உமிழ்வைக் குறைப்பதிலும், வளத் திறனை மேம்படுத்துவதிலும் உறுதியான கவனம் செலுத்தி, நிறுவனம், அதன் செயல்பாடுகளை மாறும் சந்தையின் வளர்ந்து வரும் கோரிக்கைகளுடன் சீரமைத்து, பசுமையான, நிலையான எதிர்காலத்திற்குப் பங்களிக்கிறது.
***
(Release ID: 2078854)
TS/PKV/AG/KR
(Release ID: 2078988)
Visitor Counter : 11