எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சௌபாக்யா திட்டத்தின் கீழ் மின்மயமாக்கப்பட்ட வீடுகள்

Posted On: 28 NOV 2024 4:25PM by PIB Chennai

நாட்டின் கிராமப்புறங்களில்மின்சார வசதி இல்லாதவிருப்பமுள்ள அனைத்து வீடுகளுக்கும்நகர்ப்புறங்களில் விருப்பமுள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் மின்சார இணைப்புகளை வழங்கும் நோக்கத்துடன் மத்திய அரசு அக்டோபர் 2017-ல் பிரதமரின் செளபாக்கியா  திட்டத்தை தொடங்கியது. சௌபாக்யா தொடங்கப்பட்டதிலிருந்து 31.03.2022 வரை சுமார் 2.86 கோடி வீடுகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டம்ஜூலை 2021-ல் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. தரமான மற்றும் நம்பகமான மின்சாரத்தை வழங்குவதற்காக மின் பகிர்மானத் துறையின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக மின் பகிர்மான அமைப்புகளுக்கு அதாவது டிஸ்காம்கள் / மின்துறைகளுக்கு உதவுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். நாடு தழுவிய அளவில் ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளை 12-15% ஆகவும்சராசரி விநியோக செலவு மற்றும் சராசரி வருவாய் இடைவெளியை  2024-25-க்குள் பூஜ்ஜியமாகவும் குறைக்க இத்திட்டம் உத்தேசித்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு ரூ.3,03,758 கோடியாகும். இதில் மொத்த பட்ஜெட் ஆதரவு ரூ.97,631 கோடியும் அடங்கும். திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள் (அதாவது நிதியாண்டு  2021-22 முதல் நிதியாண்டு 2025-26 வரை). 30 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 48 டிஸ்காம்கள் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தில் பங்கேற்றுள்ளன.

மேலும்இழப்பைக் குறைப்பதற்கும்ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கும் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2.77 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட உள்கட்டமைப்பு பணிகள் செயல்பாட்டின் பல்வேறு நிலைகளில் உள்ளன மற்றும் இன்றுவரை ~17% கட்டுமான முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளின் விளைவாகதேசிய அளவில் விநியோக பயன்பாடுகளின் ஏடி சி இழப்பு நிதியாண்டு 2013 இல் 25.5% இலிருந்து நிதியாண்டு 2023 இல் 15.37% ஆக குறைந்துள்ளது ஏசிஎஸ்-ஏஆர்ஆர் இடைவெளி நிதியாண்டு 2013-ல் ரூ.0.84/மணிக்கு கிலோ வாட் என்பதிலிருந்து நிதியாண்டு 2023-ல் ரூ.0.45/மணிக்கு கிலோ வாட் ஆக குறைந்துள்ளது. மேலும்கிராமப்புறங்களுக்கான விநியோக நேரம் 2014 நிதியாண்டில் 12.5 மணி நேரத்திலிருந்து 2024 நிதியாண்டில் 21.9 மணி நேரமாக அதிகரித்துள்ளது. இதேபோல்நகர்ப்புறங்களில் இது 2014 நிதியாண்டில் 22.1 மணி நேரத்திலிருந்து 2024 நிதியாண்டில் 23.4 மணி நேரமாக அதிகரித்துள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு மத்திய மின்துறை அமைச்சர் திரு. மனோகர் லால் இவ்வாறு பதிலளித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2078460

***

 

SMB/RR/DL

 
 
 

(Release ID: 2078774) Visitor Counter : 5


Read this release in: English , Urdu , Marathi , Hindi