பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெட்ரோல் - எத்தனால் கலப்பு

Posted On: 28 NOV 2024 4:57PM by PIB Chennai

எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ், பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. தேசிய உயிரி எரிபொருள் கொள்கை – 2018 மற்றும் 2022-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் இலக்கை வரும் 2030-ம் ஆண்டுக்குள் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 2022 ஜூன் மாதத்தில் பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. அதாவது நிர்ணயிக்கப்பட்ட கால அளவைக் காட்டிலும் ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே இந்த இலக்கு எட்டப்பட்டது.  எத்தனால் கலப்பு 2022-23-ம் ஆண்டில் 12.06% ஆகவும், 2023-24-ம் ஆண்டில் தோராயமாக 14.6% ஆகவும் அதிகரித்துள்ளது.  கடந்த பத்தாண்டுகளில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் விளைவாக 30.09.2024 நிலவரப்படி சுமார் ரூ.1,08,655 கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை அடிப்படையிலான தீவனத்திலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் சர்க்கரை ஆலைகள் அதன் உபரி சர்க்கரை கையிருப்பைக் குறைக்கவும், கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை வழங்க முன்கூட்டியே வருவாயை ஈட்டவும் உதவியது. கடந்த 10 ஆண்டுகளில், சுவாமி மின் உற்பத்தித் திட்டம் 2018-19 நிதியாண்டில் விரைந்து வருவாய் ஈட்டுவதற்கு உதவியது.  இதே காலகட்டத்தில், இத்திட்டத்தின் மூலம் ரூ.1,08,655 கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணி சேமிப்பையும், 185 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்க்கு மாற்றாகவும்  557 லட்சம் மெட்ரிக் டன் நிகர கரியமிலவாயு குறைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதன் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.35,000 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

----

TS/SV/KPG/DL


(Release ID: 2078760) Visitor Counter : 11


Read this release in: English , Urdu , Hindi