மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்புப் பண்ணைகளின் நோக்கங்கள்

Posted On: 28 NOV 2024 5:42PM by PIB Chennai

கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்புப் பண்ணைகள் என்பது, மீன், ஓட்டுமீன், மெல்லுடலி, துடுப்பு மீன், கடற்பாசி அல்லது பிற நீர்வாழ் உயிரினங்களை கடலோரப் பகுதிகளில் உப்பு அல்லது உவர் நீரில் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் வளர்க்கும் அலகுகள் ஆகும், மேலும், ஊட்டச்சத்து உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக நாற்றங்கால் வளர்ப்பு (ஆனால் நன்னீர் மீன்வளர்ப்பு இதில் சேர்க்கப்படவில்லை) அடங்கும். மனித நுகர்வு மற்றும் / அல்லது வணிக நோக்கத்திற்காக ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான மீன்வளர்ப்பு உற்பத்தி.

கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்டம், 2005-ன் படி, கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும், பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், கடலோர நீர்வாழ் உயிரின ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு பண்ணைகள் மீன் வளர்ப்பாளர்களால் அமைக்கப்படுகின்றன, அதே நேரத்தில் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்டம், 2005 (2023-ல் திருத்தப்பட்டது) விதிகளின்படி கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு பண்ணைகளை அவற்றின் ஒழுங்குமுறைக்காக பதிவு செய்கிறது. 2024 அக்டோபர் 30 நிலவரப்படி, கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம், இந்தியாவில் 9 கடலோர மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 46,976 கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு பண்ணைகளை பதிவு செய்துள்ளது.

ஆந்திரப் பிரதேச கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் கடந்த மூன்று ஆண்டுகளிலும், நடப்பு ஆண்டிலும், ஆண்டு வாரியாகவும், கடலோர மாவட்ட வாரியாகவும் பதிவு செய்யப்பட்ட கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்புப் பண்ணைகள் இணைப்பில் இடம் பெற்றுள்ளன.

கடலோர மீன்வளர்ப்பு முக்கியமாக இறால் வளர்ப்பு (எல். வெனாமி மற்றும் பி. மோனோடான்இனங்கள்) ஆதிக்கம் செலுத்துகிறது, இது ஒரு இலாபகரமான முயற்சி மற்றும் ஏற்றுமதி திறனைக் கொண்டுள்ளது. கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு, மீனவர்கள் உள்ளிட்ட கடலோர சமுதாயத்தினருக்கு, பண்ணைகள், மீன் குஞ்சு பொரிப்பகங்கள், தீவன உற்பத்தி நிலையங்கள், பதப்படுத்தும் நிலையங்கள், குளிர்பதன கிடங்குகள் மற்றும் அதனைச் சார்ந்த பிற தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2078575 

***

TS/MM/AG/DL


(Release ID: 2078721) Visitor Counter : 6


Read this release in: English , Urdu , Hindi