பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெட்ரோல், டீசல் நியாயமான விலையில் கிடைக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள்

Posted On: 28 NOV 2024 4:59PM by PIB Chennai

நுகர்வோருக்கு நியாயமான விலையில், பெட்ரோல்,டீசல் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உள்நாட்டில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் லிட்டர் ஒன்றுக்கு முறையே ரூ.110.04 மற்றும் ரூ.98.42-லிருந்து முறையே லிட்டருக்கு ரூ.94.77 ஆக மற்றும் ரூ.87.67 ஆக (18.11.2024 நிலவரப்படி, டெல்லி விலைகள்) குறைந்துள்ளது.

இதன் விளைவாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை முறையே லிட்டர் ஒன்றக்கு ரூ.13 மற்றும் ரூ.16 ஆக குறைத்ததன் காரணமாக இதன் விலைகள் குறைந்துள்ளன. தன் பயனை  முழுமையாக நுகர்வோருக்கு வழங்கப்பட்டது. சில மாநில அரசுகளும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மதிப்பு கூட்டு வரி விகிதங்களையும்  குறைத்தன. 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசலின் சில்லறை விலையை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதியை பன்முகப்படுத்துதல், பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி மீதான திடீர் வீழ்ச்சி, உள்நாட்டுச் சந்தையில் பெட்ரோல், டீசல் கிடைப்பதை உறுதி செய்வதற்கான உலகளாவிய சேவை, பெட்ரோலில் எத்தனால் கலப்பதை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இது தொலைதூரத்தில் உள்ள பெட்ரோலிய எண்ணெய் மற்றும் மசகு எண்ணெய் (பிஓஎல்) கிடங்குகளுக்கு கொண்டு செல்வதற்கு பயனளித்துள்ளதுடன், மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் விலைக் குறைப்பிற்கும் உதவின.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணையமைச்சர் திரு. சுரேஷ் கோபி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

---

SV/KPG/DL


(Release ID: 2078717) Visitor Counter : 8


Read this release in: English , Urdu , Hindi