இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் விளையாட்டு பயிற்சிக்கான தரநிலைகள்

Posted On: 28 NOV 2024 5:07PM by PIB Chennai

விளையாட்டு பயிற்சியின் தரநிலைகள், ஒரு கல்வி மற்றும் பயிற்சியாக இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) மூலம் செயல்படுத்தப்படுகின்றன. பாட்டியாலாவில் உள்ள நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டுப்பயிற்சி நிறுவனம் (என்.எஸ்.என்.ஐ.எஸ்), திருவனந்தபுரத்தில் உள்ள லட்சுமிபாய் தேசிய உடற்கல்வியியல் கல்லூரி மற்றும் பிற நிறுவனங்கள் மூலம், கல்வி அம்சம் குறிப்பாக செயல்படுத்தப்படுகிறது. மேலும், விளையாட்டுப் பயிற்சியின் பயிற்சி அம்சம் நாடு முழுவதும் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையங்கள் மூலம், அதன் பல்வேறு விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

கட்டமைக்கப்பட்ட பயிற்சி வகுப்புகள், மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் புத்தாக்க படிப்புகள், இந்தியாவில் விளையாட்டு பயிற்சிக்கான அளவுகோல்களை ஏற்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன. விளையாட்டு பயிற்சிக்கான தரநிலைகள் கட்டமைக்கப்பட்ட கல்வித் திட்டங்கள், உயர் செயல்திறன் மேம்பாட்டு (HPD) முன்முயற்சிகள், தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாடு (CPD), பயிற்சியாளர்களின் தேர்வு மற்றும் நியமனம் ஆகியவற்றில் உட்பொதிக்கப்பட்டுள்ளன. வகுக்கப்பட்ட தரநிலைகள் கீழ்க்கண்ட வழிமுறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மதிப்பீடு செய்தல் மற்றும் சான்றளித்தல், கண்காணிப்பு மற்றும் மறுஆய்வு முறைகள் மற்றும் கட்டாய தொடர் கல்வி விளையாட்டுப் பயிற்சிக்கான இந்த தரநிலைகள் கடுமையாக செயல்படுத்தப்படுகின்றன.

சர்வதேச ஒத்துழைப்பு, விளையாட்டு அறிவியல் ஒருங்கிணைப்பு, உலகளாவிய பிரதிநிதித்துவம் மற்றும் பயிற்சி மூலம், இந்திய விளையாட்டுப் பயிற்சி தரநிலைகள், உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் ஒத்துப்போகின்றன. உயர் செயல்திறன் கொண்ட பயிற்சித் திட்டங்களை நடத்துதல், அறிவியல் பாடத்திட்டத்தை வடிவமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், தரவு பகுப்பாய்வுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்திறன் கண்காணிப்பு மற்றும் பாடத்திட்டம் மற்றும் செயல்பாட்டு தரத்தைத் தொடர்ந்து புதுப்பித்தல் போன்றவை மேற்கண்ட விளையாட்டுப் பயிற்சி தரங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெறும் இந்திய விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இந்தத் திட்டங்களின் செயல்திறனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் இந்திய விளையாட்டு பயிற்சி தரத்தின் வெற்றிக்கு சான்றாகும்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=207854   

***

TS/MM/AG/DL


(Release ID: 2078708) Visitor Counter : 9


Read this release in: English , Urdu , Hindi