வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தை ஏற்படுத்துதல்
प्रविष्टि तिथि:
28 NOV 2024 3:13PM by PIB Chennai
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதியத்தை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. இதில் கழிவுநீர், திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் வழங்கல், சுகாதாரம், வடிகால்கள் / மழைநீர் வடிகால்கள் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு நிலையான நிதி ஆதாரங்களை வழங்குவதன் மூலம், பொது / மாநில முகமைகள், மாநகராட்சிகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும் நகர்ப்புர உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும். இதனை நோக்கமாக கொண்டு இந்த நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியத்தை தேசிய வீட்டுவசதி வங்கி நிர்வகிக்கிறது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு. டோகான் சாஹு மக்களவையில் இன்று பதிலளித்தார்.
***
TS/SV/RR/KR/DL
(रिलीज़ आईडी: 2078624)
आगंतुक पटल : 58