மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
டிஜிட்டல் கண்டுபிடிப்பு மூலம் வாழ்க்கையை மேம்படுத்துதல்: இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பொது சேவை மையம் பிரகாசித்தது
Posted On:
28 NOV 2024 10:24AM by PIB Chennai
இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் அரங்கம் எண் 14-ல் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு துடிப்பான அரங்கை அமைத்துள்ளது. பொது சேவை மையங்களால் (சிஎஸ்சி) நடத்தப்படும் இந்த அரங்கு, கிராமின் இ-ஸ்டோர், சிஎஸ்சி அகாடமி, டிஜிபே, ஆதார் தொடர்பான சேவைகள் மற்றும் பிற முக்கிய முயற்சிகள் உள்ளிட்ட டிஜிட்டல், சமூக சேவைகளைக் காட்டுகிறது. இதன் முதன்மை நோக்கம் பொது சேவை மையங்கள் வழங்கும் வசதிகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதும், தங்களின் அதிகாரத்திற்காக இந்த சேவைகளைப் பயன்படுத்த அதிகமான மக்களை ஊக்குவிப்பதும் ஆகும்.
இந்தப் பொது சேவை மைய அரங்கை தில்லியைச் சேர்ந்த சித்தார்த், விகாஸ் என்ற இரண்டு அர்ப்பணிப்பு மிக்க கிராம அளவிலான தொழில்முனைவோர் வழிநடத்துகின்றனர். இவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து தங்கள் சமூகத்திற்கு சேவை செய்கிறார்கள்.
இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் உள்ள பொது சேவை மைய அரங்கிற்கு வருபவர்கள், தயாரிப்புகளை எளிதாக வாங்கவும் விற்கவும் உதவும் கிராமின் இ-ஸ்டோர், பணமில்லா பரிவர்த்தனைகளுக்கான டிஜிபே, டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதற்கான சிஎஸ்சி அகாடமியின் திட்டங்கள் போன்றவற்றை அறிந்துகொள்கிறார்கள். சித்தார்த், விகாஸ் போன்ற கிராம அளவிலான தொழில்முனைவோரின் முயற்சிகள், டிஜிட்டல் சேவைகள் எவ்வாறு இடைவெளிகளைக் குறைக்கும், துன்பங்களை எதிர்கொண்டாலும் தனிநபர்களுக்கு அதிகாரம் அளிக்கும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
ஒருவருக்கு விடாமுயற்சியும் சரியான வாய்ப்புகளும் இருந்தால் சவால்கள் இருந்தபோதிலும் வெற்றியை அடைய முடியும் என்பதை இவர்களின் கதைகள் நமக்குக் கற்பிக்கின்றன. சிஎஸ்சி முன்முயற்சி டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பது மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள தனிநபர்களை தன்னம்பிக்கையும் அதிகாரமும் பெற ஊக்குவிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2078249
***
(Release ID: 2078249)
AD/SMB/RR/KR
(Release ID: 2078499)
Visitor Counter : 6