தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு திரைப்படங்கள் சென்றடைவது அவசியம்: கியூப் சினிமா டெக்னாலஜிஸின் இணை நிறுவனர் திரு செந்தில் குமார்
“மாற்றுத் திறனாளிகள் திரையரங்குகளுக்கு வந்து திரைப்படங்களை பார்ப்பதற்கும், இது தொடர்பான அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், திரைப்படங்களை காட்சிப்படுத்துவதற்கான அணுகல் தர வழிகாட்டுதல்களை அரசு அறிவித்துள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் தெளிவானவை, விரிவானவை. இதைச் செயல்படுத்த கொடுக்கப்பட்ட காலக்கெடு நியாயமானது" என்று கியூப் சினிமா டெக்னாலஜி நிறுவனத்தின் இணை நிறுவனர் செந்தில் குமார் கூறியுள்ளார். கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்படவிழாவில், திரையரங்குகளில் மாற்றுத் திறனாளிகளுக்கேற்ற திரைப்பட காட்சி குறித்த விளக்க வகுப்பின் போது (மாஸ்டர் கிளாஸ்) கூறினார்.
மாற்றுத்திறனாளி பார்வையாளர்களுக்கான தொழில்நுட்ப, படைப்பாற்றல் அம்சங்களைப் பற்றி விவரித்தார். ஆடியோ விளக்கங்களில் சமநிலையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். அதிகப்படியான விவரிப்பு பார்வையாளர்களை திசைதிருப்பக்கூடும் என்று அவர் கூறினார். பொதுவாக, ஒரு படத்தின் சுமார் 15% பாகம் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆடியோ விளக்கங்கள் மூலம் விளக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
"மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்புகள், திரைப்பட அணுகல் குறித்து மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்துவதாக அவர் கூறினார். இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, 2024 மார்ச் மாதத்தில், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், செவிப்புலன் குறைபாடுடையவர்கள், பார்வைக் குறைபாடுள்ளவர்கள் ஆகியோருக்குப் பயனளிக்கும் வகையில் "திரையரங்குகளில் திரைப்படங்களின் பொது காட்சியில் அணுகல் தரநிலைகளின் வழிகாட்டுதல்களை" வெளியிட்டது என்று அவர் தெரிவித்தார்.
அரசு அறிமுகப்படுத்தியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திரைப்பட அணுகல் அம்சங்கள் குறித்த வழிகாட்டுதல்களையும் திரு செந்தில் குமார் விரிவாக எடுத்துரைத்தார்.
-----
(Release ID: 2077876)
TS/PLM/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2078247)
வருகையாளர் எண்ணிக்கை : 56