தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி

Posted On: 27 NOV 2024 3:23PM by PIB Chennai

அஞ்சல் துறையின் கீழ் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (ஐபிபிபி) மட்டுமே உள்ளது. இந்த வங்கிக்கு 650 கிளைகளும், தபால் அலுவலக நெட்வொர்க் மூலம் 1.63 லட்சத்துக்கும் மேற்பட்ட அணுகல் மையங்களும் உள்ளன.

ஐபிபிபி சேமிப்புக் கணக்குகள், நடப்புக் கணக்குகள், விர்ச்சுவல் டெபிட் கார்டு, உள்நாட்டு பணப் பரிமாற்ற சேவைகள், பில் மற்றும் பயன்பாட்டு கட்டணங்கள், ஐபிபிபி வாடிக்கையாளர்களுக்கான காப்பீட்டு சேவைகள், ஐபிபிபி கணக்குகளுடன் அஞ்சலக சேமிப்புக் கணக்கு (POSA) இணைப்பு, அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுக்கு ஆன்லைனில் பணம் செலுத்துதல், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (DLC), ஆதார் செயல்படுத்தப்பட்ட பணம் செலுத்தும் முறை (AePS), எந்தவொரு குடிமகனுக்கும் ஆதாரில் மொபைல் எண் புதுப்பிப்பு மற்றும் 0-5 வயதுடைய எந்தவொரு குழந்தைக்கும் குழந்தை சேர்க்கை சேவைகள்.

தமிழ்நாட்டில் 75,38,263 கணக்குகளை ஐபிபிபி தொடங்கியுள்ளது.

புதுச்சேரியில் 13,383 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.

ஐபிபிபி சேவைகள் கிடைப்பது குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க ஐபிபிபி-ன் பிராண்டட் விளம்பரப் பலகைகள் அனைத்து அஞ்சலகங்களிலும் நிறுவப்பட்டுள்ளன. அஞ்சல் துறை மற்றும் ஐபிபிபி ஆகியன ஐபிபிபி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் பிரபலப்படுத்துவதற்காக தொடர்ந்து முகாம்களை நடத்தி வருகின்றன. காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள், வானொலி குறும்புகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஊடக பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன.

பயனாளிகளுக்கு பணம் செலுத்துதல், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்கள் வழங்குதல், ஆதார் எண்ணில் தகவல் புதுப்பித்தல் போன்ற அரசு திட்டங்களுக்கான அணுகலை விரிவுபடுத்துதல், இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கியின் கையடக்க கைபேசி சாதனங்கள் மூலம் ஆதார் எண்ணை புதுப்பித்தல் ஆகியவை வீடுகளுக்கே சென்றடையும் வகையில் செயல்படுத்தப்படுகின்றன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொலைத் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077894

****

MM/RS/DL


(Release ID: 2078197) Visitor Counter : 7


Read this release in: English , Urdu , Hindi