புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரேடார் மூலமான வானிலை முன்கணிப்பு அமைப்பு

प्रविष्टि तिथि: 27 NOV 2024 6:00PM by PIB Chennai

வானிலை இயக்கம் என்ற மிஷன் மௌசம் திட்டத்தின் கீழ் வானிலை முன்னறிவிப்பின் துல்லியத்தை மேம்படுத்துவதற்காக நாட்டில் டாப்ளர் வானிலை ரேடார்கள் (DWRs) எண்ணிக்கையை அதிகரிக்க புவி அறிவியல் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

வானிலை இயக்கத்தின் கீழ் மொத்தம் 87 டாப்ளர் வானிலை ரேடார்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் நிறுவப்பட உள்ளன. நாட்டின் பல பகுதிளை உள்ளடக்கிய வகையில் அமைக்கப்படும் இந்த டாப்ளர் வானிலை ரேடார்கள், நாட்டின் வானிலை கண்காணிப்பு திறன்களை மேம்படுத்தும்.

இந்தத் தகவலை மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை, புவி அறிவியல் துறை இணைமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

 

******


(रिलीज़ आईडी: 2078128) आगंतुक पटल : 58
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी