பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடலோரக் காவல் படையின் 11-வது தேசிய கடல்சார் பயிற்சி – பாதுகாப்புத்துறை செயலாளர் தொடங்கி வைக்கிறார்

Posted On: 27 NOV 2024 12:34PM by PIB Chennai

இந்தியக் கடலோரக் காவல்படையின் 11-வது (SAREX-24) தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்புப் பயிற்சியும் பயிலரங்கும் 2024  நவம்பர் 28 -29, தேதிகளில் கேரளாவின் கொச்சியில் தேசிய கடல்சார் தேடுதல், மீட்பு வாரியத்தின்  சார்பில் நடைபெறுகிறது.  இதை பாதுகாப்புத் துறைச் செயலாளர்  திரு ராஜேஷ்குமார் சிங் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இந்தியக் கடலோரக் காவல்படை (ஐசிஜி) தலைமை இயக்குநர் எஸ்.பரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டின் கருப்பொருள் பிராந்திய ஒத்துழைப்பு மூலம் தேடுதல், மீட்புத் திறன்களை மேம்படுத்துதல் என்பதாகும். சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் பெரிய அளவிலான தற்செயல் நிகழ்வுகளின் போது உதவி வழங்குவதற்கான கடலோரக் காவல்படையின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்வின் முதல் நாளில், அரசு நிறுவனங்கள், அமைச்சகங்கள், ஆயுதப்படைகளின் மூத்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்கும் கருத்தரங்கங்களும் பயிலரங்கங்களும் நடைபெறும்.

2-வது நாளில், இந்தியக் கடலோரக் காவல்படை பயிற்சி, கடற்படை, இந்திய விமானப்படையின் கப்பல்கள், விமானங்கள், கொச்சின் துறைமுக ஆணையத்தின் பயணிகள் கப்பல், இழுவை கப்பல், சுங்கத்துறையின் படகுகள் ஆகியவற்றின் பங்கேற்புடன் கொச்சி கடற்கரையில் இரண்டு பெரிய அளவிலான பயிற்சிகளை உள்ளடக்கிய கடல்சார் பயிற்சி மேற்கொள்ளப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077822

 

----

TS/PLM/KPG/KR


(Release ID: 2077858) Visitor Counter : 12