தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav
iffi banner

‘இந்திய திரைப்பட கொண்டாட்டத் திருவிழா( IFFiesta):55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு கலை மற்றும் கலாச்சார மெருகூட்டிய மத்திய மக்கள் தொடர்பகம்; இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 110 கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள்தொடர்பகம், இந்திய சர்வதேச திரைப்பட விழா 2024-க்கு இடையே இந்திய திரைப்பட கொண்டாட்ட திருவிழாவை கோவாவின் பானாஜியில் உள்ள கலா அகாடமியில் நடத்தியது. இசை மற்றும் நாடகப் பிரிவைச் சேர்ந்த கலைஞர்கள் இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை சித்தரிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தினர். ஒரு பல்லூடக கண்காட்சியும் நடத்தப்பட்டது.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ, பிரபல திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான  அக்கினேனி நாகார்ஜூனராவுடன் இணைந்து, ‘ஸஃபர்நாமா: இந்திய சினிமாவின் பரிணாமம்’ என்ற தலைப்பிலான பல்லூடக கண்காட்சியை கூட்டாகத் தொடங்கிவைத்தனர். இந்தக் கண்காட்சி சுமார் 3000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.  நூற்றாண்டு காணும் திரையுலக ஜாம்பவான்களான ராஜ்கபூர், முகமது ரஃபி, தபன் சின்ஹா மற்றும் அக்கினேனி நாகேஸ்வர ராவ் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் விதமான காட்சிகள் இதில் இடம்பெற்றிருந்தன.

நாட்டின் சென்னை, ஐதராபாத், பெங்களுரூ, புனே, தில்லி, குவஹாத்தி, புவனேஸ்வர், ஜம்மு மற்றும் இமாச்சலப்பிரதேசம் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த மத்திய மக்கள் தொடர்பகத்தைச் சேர்ந்த 110 கலைஞர்கள்  பல்வேறு மாநில நடன மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

சென்னை மக்கள் தொடர்பகம்  சார்பில் தமிழ்நாட்டின் கரகாட்டம் இடம்பெற்றது.மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077490

***

TS/MM/RS/KR

iffi reel

(Release ID: 2077837) Visitor Counter : 26