சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அரசியலமைப்பு சட்ட தினம் 2024 மற்றும் இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளை புதுதில்லியில் கொண்டாடியது

Posted On: 26 NOV 2024 6:58PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 75-வது அரசியலமைப்புச் சட்ட தினத்தையொட்டி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கொண்டாட்டங்களுக்கு மத்திய சமூக நீதிமற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமை தாங்கினார். நீதி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சியடைந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை இந்த நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியது.

டாக்டர் வீரேந்திர குமார் தலைமையில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை வாசிப்புடன் நிகழ்வு தொடங்கியது. இக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், "இந்திய அரசியலமைப்பு ஒரு ஆவணம் மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் அடித்தளம் மற்றும் நமது நாட்டின் முன்னேற்றத்திற்கான வழிகாட்டும் ஒளி. அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் உறுதி செய்யப்படும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நாம் பணியாற்றும்போது நமது அன்றாட வாழ்க்கையில் அதன் மதிப்புகளை நிலைநிறுத்துவது அவசியம் என்று தெரிவித்தார்.

1949 நவம்பர் 26, அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசியலமைப்பு, இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் ஜனநாயகத்தின் மீதான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் அடையாளமாக நிற்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, நீதி மற்றும் சம வாய்ப்புகளை நோக்கி நாட்டை வழிநடத்தும் கொள்கைகளை இது உள்ளடக்கியுள்ளது. இந்த அம்சங்கள் விளிம்புநிலையில் உள்ளவர்களை மேம்படுத்தவும், சமூகத்தில் அவர்களுக்கு உரிய இடத்தை உறுதி செய்யவும் அமைச்சகம் மேற்கொண்ட நோக்கத்துடன் ஆழமாக எதிரொலிக்கின்றன என்று டாக்டர் வீரேந்திர குமார் குறிப்பிட்டார். பல்வேறு முன்முயற்சிகள் மூலம், சமத்துவம், பாகுபாடின்மை மற்றும் சமூக நீதி ஆகிய அரசியலமைப்பு கொள்கைகளை நனவாக்குவதில் அமைச்சகம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077606

***

TS/IR/AG/DL


(Release ID: 2077701) Visitor Counter : 6


Read this release in: English , Urdu , Hindi