இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் தலைமையில் அறிவியல் தொழில்நுட்ப தொகுப்புகளின் கூட்டம் புவனேஸ்வரில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
26 NOV 2024 6:43PM by PIB Chennai
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் கே சூத் தலைமையில், 2-வது அனைத்து அறிவியல் தொழில்நுட்ப தொகுப்புகளின் கூட்டம் புவனேஸ்வரில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. புவனேஸ்வர நகர அறிவாற்றல் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு அறக்கட்டளை, இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பதவி உருவாக்கப்பட்டு 25.11.2024 வுடன் 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பேராசிரியர் சூத், துறைகளுக்கு இடையேயான கட்டுக்கோப்பை ஊக்குவிப்பதன் அவசியத்தையும், பிரச்சனைகளுக்கு கூட்டாகத் தீர்வு காணும் மனப்பான்மையை மேம்படுத்துவது குறித்தும் அவர் எடுத்துரைத்தார். இது போன்ற தொகுப்பு மாதிரிகள் சிறந்த கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077599
***
TS/MM/KPG/DL
(रिलीज़ आईडी: 2077695)
आगंतुक पटल : 60