தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகத்துடன் இணைந்த அலுவலகங்களின் செயல்பாடு மற்றும் எதிர்கால திட்டம் குறித்து துறையின் செயலாளர் ஆய்வு

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2024 6:56PM by PIB Chennai

தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகத்துடன் இணைந்த அலுவலகங்களின் செயல்பாடு மற்றும் எதிர்கால திட்டம் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் துறையின் செயலாளர் திருமதி சுமிதா தாவ்ரா தலைமையில் புதுதில்லியில் உள்ள ஷ்ரம் சக்தி பவனில் இன்று நடைபெற்றது. தலைமைத் தொழிலாளர் ஆணையர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம், சுரங்கப்பாதுகாப்பு தலைமை இயக்குநரகம், தொழிலக ஆலோசனை சேவை மற்றும் தொழிலாளர் கல்வி நிலையங்களின் தலைமை இயக்குநரகம் உள்ளிட்ட  அலுவலகங்களின் செயல்பாட்டின் தற்போதைய நிலை குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

நிலுவையில் உள்ள தொழிலகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான இயக்கத்தை தொடர்வதுடன், ஆய்வறிக்கைகளை ஷ்ரம் சுவிதா இணையதளத்தில் உரியநேரத்தில் பதிவேற்றம் செய்வதோடு ஆய்வு நடைமுறைகளை ஆய்வு செய்யுமாறும் தலைமைத் தொழிலாளர் ஆணையருக்கு அமைச்சகம் அறிவுறுத்தியது.

மத்திய அரசு தொழிற்சாலை தீர்ப்பாயங்கள் – தொழிலாளர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வ செய்வதுடன், மின்னணு நீதிமன்றங்கள் வாயிலாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077605

--- 

 

MM/KPG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2077689) வருகையாளர் எண்ணிக்கை : 72
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी