இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2047-ம் ஆண்டிற்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற நிலையை அடைய இளைஞர்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்: டாக்டர் மன்சுக் மாண்டவியா

Posted On: 26 NOV 2024 6:18PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள கமலா நேரு கல்லூரியில் இன்று நடைபெற்ற 'வளர்ச்சியடைந்த இந்தியா தூதர் – இளையோர் இணைப்பு நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய மத்திய இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் இளைஞர்கள் ஆற்ற வேண்டிய பங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 2047-ம் ஆண்டில் இந்தியா தனது 100-வது சுதந்திர தினத்திற்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் இலக்கை அவர் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை முன்னெடுப்பதில் இளைஞர்கள் முக்கியமானவர்கள் என்று அவர் கூறினார்.

நமது இளைஞர்களை மேலும் லட்சியமுள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், தொலைநோக்கு பார்வை கொண்டவர்களாகவும், 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற தொலைநோக்கு பார்வையுடன் அவர்களின் விருப்பங்களை சீரமைப்பவர்களாகவும் நாம் உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மை பாரத் தளத்தை இளைஞர்களுக்கான விரிவான, ஒற்றைச் சாளர தளமாக மாற்றுவதற்கான திட்டங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். இதன் மூலம் பலதரப்பட்ட வளங்கள், வாய்ப்புகள் மற்றும் கருவிகள் எளிதாக கிடைக்கின்றன. இந்த தளம் இளைஞர்கள் தொழில்முறை வளர்ச்சியை ஆராயவும், வழிகாட்டிகளுடன் தொடர்பு கொள்ளவும், நாட்டின் நிர்மாண முயற்சிகளில் தீவிரமாக பங்களிக்கவும் ஒரே இடத்தில் செயல்படும் இடமாக செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் – தேசிய இளைஞர் விழா 2025 குறித்து பேசிய மத்திய அமைச்சர், இந்த ஆண்டு இளைஞர் திருவிழா புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவித்தார்.

"வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல்" வினாடி வினா போட்டியின் முதல் கட்டம் தற்போது மை பாரத் தளத்தில் நேரலையில் உள்ளது என்றும் டாக்டர் மாண்டவியா அறிவித்தார். இளைஞர்கள் தங்களது திறமைகளையும், புதுமையான சிந்தனைகளையும் வெளிப்படுத்த உதவும் இந்த உற்சாகமான வாய்ப்பில் பதிவு செய்து பங்கேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2077580

***

TS/IR/AG/DL


(Release ID: 2077656) Visitor Counter : 19