தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav
iffi banner

ஒரு பெரிய இதயம் கொண்ட ஒரு சிறிய படம், லெஃப்ட் அன்செட், என்ற போர்த்துகீசிய திரைப்படம் 55-வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் திரையீடு

திரைப்படத் தயாரிப்பாளர் ரிக்கார்டோ வலென்சுவேலா பினிலாவின்  போர்த்துகீசிய திரைப்படமான 'லெஃப்ட் அன்செட்' (லோ கியூ நோ சே டிஜோ), 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. "உலக சினிமா" பிரிவின் கீழ் திரையிடப்பட்ட இந்த திரைப்படம், மொபைல் தொழில்நுட்பத்தின் வருகைக்கு மத்தியில், ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதில் உள்ள சிக்கல்களை ஆராய்கிறது. ஐ.எஃப்.எஃப்.ஐ.யில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் ரிக்கார்டோ வலென்சுவேலா பினிலா தனது முதல் திரைப்படம் குறித்து விவாதித்தார்.

1994-ம் ஆண்டில் தெற்கு சிலியில் எடுக்கப்பட்ட 'லெஃப்ட் அன்செட்' மார்கரிட்டாவின் வலி நிறைந்த கதையைச் சொல்கிறது. ஒரு மொபைல் போன் விற்பனையாளராக, ஒற்றை பெற்றோராக, தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட  இறுக்கமான உறவுகளின் போராட்டங்களையும் இந்த கதை சொல்கிறது. பிறருடன் தொடர்பு கொள்வதற்கான உபகரணங்களுடன் அவரது தொழில் ஒரு பக்கம், தாயுடன் இணைவதில் அவரது இயலாமை மற்றோரு பக்கம் என இரண்டையும் அடுத்தடுத்து காட்டுவதுதான் படத்தின் உணர்ச்சிகரமான மையத்தை உருவாக்குகின்றது.

"இந்த கதை என் சொந்த வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டது" என்று இயக்குனர் பகிர்ந்து கொண்டார். "முக்கிய கதாபாத்திரம் எனது தாயால் உந்தப்பட்டு உருவாக்கப்பட்டது. 1990-களில் அதே வேலையில் இருந்த அவர், மொபைல் தொழில்நுட்பத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்த கிராமப்புறங்களுக்குச் சென்றார். பாரம்பரிய தகவல்தொடர்பு வழிகளை கைவிடுவதற்கான யோசனையை மக்கள் எதிர்த்த ஒரு சவாலான நேரம் அது.

"அந்த காலகட்டத்தை மீண்டும் உருவாக்க எங்களிடம் மேம்பட்ட தொழில்நுட்பம் இல்லை, ஆனால் கலைத்துறை ஒரு அற்புதமான வேலையைச் செய்தது. அப்போதைய கிராமப்புற சிலிக்கும் இப்போதைய சிலிக்கும் அதிக வித்தியாசம் இல்லை, இது நம்பகத்தன்மையை உருவாக்க உதவியது.

 "நாங்கள் ஒரு சிறிய குழுவினர் மற்றும் நடிகர்களுடன் பணியாற்றினோம், பல தொழில்முறை அல்லாத நடிகர்கள், அவர்களில் பெரும்பாலோர் உள்ளூர்வாசிகள்" என்று பினிலா கூறினார். "இது ஒரு கடினமான ஆனால் பலனளிக்கும் செயல். பட்ஜெட் பற்றாக்குறை இருந்தாலும் பெரிய மனசு கொண்ட சின்ன படம்" என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2077511

----

TS/MM/KPG/DL

iffi reel

(Release ID: 2077649)