தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
55 வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 'வெங்கியா', 'பூட்போரி' மற்றும் 'ஆர்டிகிள் 370' திரைப்படங்கள் மூலம் சக்திவாய்ந்த கதைகளை வெளிப்படுத்தியது
55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (ஐ.எஃப்.எஃப்.ஐ) 'இந்தியன் பனோரமா-திரைப்படங்கள்' பிரிவில், கன்னட படம் 'வெங்கியா', பெங்காலி படம் 'பூட்போரி' மற்றும் இந்தி படம் 'ஆர்டிகிள் 370' ஆகிய மூன்று முத்தான சினிமாக்கள் திரையிடப்பட்டன. தொலைநோக்கு பார்வை கொண்ட திரைப்பட தயாரிப்பாளர்களால் உயிர்ப்பிக்கப்பட்ட இந்த திரைப்படங்கள், வெறும் கதை சொல்லலுக்கு அப்பால், சுய கண்டுபிடிப்பு, மீட்பு, தேசபக்தி, தியாகம், காதல், வாழ்க்கை மற்றும் பிந்தைய வாழ்க்கை ஆகியவற்றின் சிக்கலான உணர்ச்சிப் பயணத்தின் ஆழமான ஆய்வுகளைத் தொடங்குகின்றன.
55-வது ஐ.எஃப்.எஃப்.ஐயில் பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த ஊடக உரையாடலின் போது, 'வெங்கியா' படத்தின் இயக்குனர் சாகர் புராணிக், படத்தின் தயாரிப்பின் போது எதிர்கொண்ட சவால்கள் குறித்து விவாதித்தார். வெங்கியாவின் கதாபாத்திரத் தன்மை, இருளில் இருந்து வெளிச்சத்திற்கு பரிணமிக்கும் ஒன்று என்று அவர் விவரித்தார், இது பாத்திரத்தின் சிக்கலான தன்மையை எடுத்துக்காட்டுகிறது. படபிடிப்பு சிக்கல்களைப் பற்றி கேட்டபோது, இந்த படம் ஆபத்தான இடங்களில் படமாக்கப்பட்டதாக புராணிக் தெரிவித்தார். இருப்பினும் உள்ளூர் அரசின் ஒத்துழைப்பைப் பாராட்டினார். படபிடிப்பு இடத் தேர்வில், ஒரு இயற்கையான அணுகுமுறை பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் விளக்கினார். வெங்கியாவின் தேடல் மாறுபட்ட படபிடிப்பு இடங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிகாட்டியது. இந்தியாவின் வளமான கலாச்சார பன்முகத்தன்மையானது தனிநபர்களையும் குற்றவாளிகளையும் கூட மனமாற்றம் செய்யும் சக்தியைக் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்தி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
'வெங்கியா' படத்தின் தயாரிப்பாளர் பவன் உடையார் கூறுகையில், இந்தப் படம் 12 மாநிலங்களில் படமாக்கப்பட்டது, இது இந்தியாவின் துடிப்பான கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது. படத்தின் சாராம்சத்துடன் ஒத்துப்போகும் அவற்றின் துடிப்பான, வண்ணமயமான தன்மை மற்றும் அவற்றின் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்காக இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன என்று அவர் விளக்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077456
-----
TS/MM/KPG/DL
(Release ID: 2077522)
Visitor Counter : 53