மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

தேசிய சிப் வடிவமைப்பு உள்கட்டமைப்பை நேரடியாக அணுகும் வகையில் குறைக்கடத்தி வடிவமைப்பு அமைப்பிற்கு சாதகமான சூழலை மத்திய அரசு உருவாக்குகிறது

Posted On: 26 NOV 2024 1:47PM by PIB Chennai

தேசிய சிப் வடிவமைப்பு உள்கட்டமைப்பை நாடு முழுவதும் உள்ள குறைக்கடத்தி வடிவமைப்பு சூழலுக்கு நேரடியாக கொண்டு  செல்ல முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது ஒரு மையப்படுத்தப்பட்ட வசதி ஆகும். இது முழு சிப் வடிவமைப்பு சுழற்சிக்கும் (5 என்எம்) மிகவும் மேம்பட்ட கருவிகளை வழங்குகிறது.

இது கணினி மற்றும் வன்பொருள் உள்கட்டமைப்பு, ஐபி கோர்கள் மற்றும் எஸ்சிஎல் ஃபவுண்டரியில் வடிவமைப்பு ஃபேப்ரிகேஷன் மற்றும் சி2எஸ் (சிப்ஸ் டு ஸ்டார்ட்-அப்) திட்டம் மற்றும் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் வடிவமைப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் கல்வி நிறுவனங்களுக்கு விரிவான சேவைகளை வழங்குவதற்கான நிபுணத்துவத்தையும் வழங்குகிறது.

ராட்டை முதல் சிப்புகள் வரை: தற்சார்பு பாரதம்

தற்போது 250-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் 20,000-க்கும் அதிகமான  மாணவர்கள் மற்றும் 45 புத்தொழில் திட்டங்களில் தொழில்முனைவோருடன் ஈடுபட்டுள்ள சிப்பின் மையம், பி.டெக், எம்.டெக் மற்றும் பிஎச்டி நிலையில் 85,000 மாணவர்களுக்கு அதிநவீன ஈடிஏ (எலக்ட்ரானிக் டிசைன் ஆட்டோமேஷன்) கருவிகளைப் பயன்படுத்தும் வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஈடிஏ கருவிகளை அணுகும் நிறுவனங்களின் பட்டியலை இந்த இணையதளத்தில் காணலாம்  https://c2s.gov.in/EDA_Tool_Support.jsp  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2077361

***

TS/IR/AG/KR


(Release ID: 2077428) Visitor Counter : 38