தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
ஷ்ரம் சுவிதா இணையதளத்தின் பயன்பாடு மற்றும் தாக்கம்
Posted On:
25 NOV 2024 6:00PM by PIB Chennai
ஷ்ரம் சுவிதா இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலாளிகளுக்கு, 2014 அக்டோபர் முதல் 2024 நவம்பர் 18 வரை மொத்தம் 46,10,233 தொழிலாளர் அடையாள எண் (LIN) ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சகத்தின் தொழில்சார் சேவை என்ற தலைப்பின் கீழ், வரவு செலவுத் திட்டத்தில் ஷ்ரம் சுவிதா இணையதள திட்டத்தைப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2024-25 நிதியாண்டில், எஸ்.எஸ்.பி.க்கு ரூ.16.36 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் பதிவு, உரிமம், வணிக நிறுவனங்களுக்கு வருமான வரி தாக்கல் போன்ற வசதிகளை சீரற்ற இடர் அடிப்படையிலான ஆய்வு முறையுடன் வழங்குவதன் மூலம், இந்த இணையதள செயல்பாட்டை எளிதாக்கியுள்ளது. இதன் மூலம் சட்டத்தை அமல்படுத்தும் முகமைகளுக்கு பணிச்சுமை குறைகிறது.
தொடங்கப்பட்டது முதல் 2024 நவம்பர் 18 வரை, 1,20,663 உரிமங்கள் ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மொத்தம் 4,35,376 ரிட்டன்கள் ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
-----
TS/MM/KPG/DL
(Release ID: 2077048)
Visitor Counter : 11